முகப்புmollywood

தேசிய விருது விவகாரம்! மம்முட்டி ரசிகர்கள் ஆவேசம்!

  | August 12, 2019 17:33 IST
National Award

துனுக்குகள்

  • இவர் நடிப்பில் வெளியான பேரன்பு படம் நல்ல வரவேற்பை பெற்றது
  • தேர்வு குழு பட்டியலில் மம்முட்டி பெயர் இல்லாததால் ரசிகர்கள் ஆவேசம்
  • தேர்வுக்குழு தலைவரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி
சிறந்த படங்களுக்கான தேசிய விருது பெருகிறவர்களின் பெயர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழில் பாரம் என்கிற படத்திற்கு சிறந்த படத்திற்கான விரும், கே.ஜி.எஃப், கீர்த்தி சுரேஷ் நடித்த மஹாநடி, ஆகிய தென்னிந்திய படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்யாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான `பேரன்பு' நல்ல விமர்சனங்களை பெற்று நன்றாக ஓடியது. இதில் மம்முட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.
 
ஆனால் விருது பட்டியலில் மம்முட்டி பெயர் இல்லை என்று தெரிந்ததுமே தேர்வு குழு தலைவர் ராகுல் ராவிலின் பேஸ்புக் பக்கத்தை அவரது ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக  ஆக்கிரமிக்க தொடங்கினர். கடும் சொற்களை பயன்படுத்தி ராகுல் ராவிலை வசைபாடினர். இதனால் ராகுல், மம்முட்டிக்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தார்.
 
அதில், ``மிஸ்டர் மம்முட்டி உங்கள் ரசிகர்கள் என்னை நோக்கி வெறுப்பான சொற்களை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். `பேரன்பு' படத்துக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என என்னைக் கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்கு விளக்கம் அளிக்கிறேன். முதலில் ஒன்றை சொல்கிறேன். நடுவரின் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது.
 
அதேநேரம் உங்களின் `பேரன்பு' திரைப்படம் பிராந்திய குழுவினராலே நிராகரிக்கப்பட்டதால் மத்திய குழுவின் பரிசீலனைக்கு வரவில்லை. இதுபுரியாமல் இழந்த ஒன்றுக்காக உங்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்” எனப் பதிவிட்டார். இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே மம்முட்டி ஒரு பதிவை இட்டார். அதில், “மன்னித்துக் கொள்ளுங்கள் சார். இது பற்றி எனக்குத் தெரியாது. இருந்தாலும் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்