முகப்புmollywood

இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட மஞ்சுவாரியர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  | August 20, 2019 22:10 IST

துனுக்குகள்

  • அசுரன் படத்தில் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்
  • இமாச்சலபிரதேசத்தில் மஞ்சுவாரியர் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின
  • சனல்குமார் சசிதரன் இயக்கும் “கய்யாட்டம்” படத்தில் நடித்து வருகிறார் இவர்
மலையாள நடிகை மஞ்சுவாரியர் படக்குழுவோடு இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகவும், கையிருப்பு உணவு குறைந்துவிட்டதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.
 
மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கும் “கய்யாட்டம்” என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை மஞ்சுவாரியர் உள்பட 30 கலைஞர்கள் இமாச்சலப்பிரதேசம் சென்றுள்ளனர். கடந்த 3 வாரங்களுக்கு முன் படக்குழு ஸ்பிட்டி பள்ளத்தாக்னிக் அருகில் சத்ரு கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்னர். இந்நிலையில், கனமழை பெய்ததை அடுத்து தர்மசாலா-காங்ரா சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு, அவர்கள் இருந்த சத்ரு கிராமத்தில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் படக்குழுவுக்கு உணவுபொருட்கள் விநியோம் தடைபட்டுள்ளது. கையிருப்பு உணவுப் பொருட்கள் 2 நாட்களுக்கு மேல் தாங்காது என மஞ்சு வாரியர், தனது சகோதரர் மது வாரியருக்கு அவசரகால செய்தி அனுப்பியுள்ளார். 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு சிக்கித் தவிப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரனிடம் உதவி கோரியுள்ளதாகவும், இமாச்சல் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரிடம் பேசி உதவி செய்வதாக அவர் உறுதியளித்ததாகவும் மது வாரியர் கூறியுள்ளார். ஸ்பிடி பள்ளத்தாக்கில் 2 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். தமிழில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் மூலம் மஞ்சுவாரியர் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்