முகப்புmollywood

ஜெயராமின் ‘நமோ’ ட்ரெய்லரை பகிர்ந்து, வாழ்த்திய ‘மெகா ஸ்டார்’

  | July 28, 2020 13:13 IST
Jayaram

இயக்குநர் விஜீஷ் மணி தலைமையிலான இந்த படத்தில் குசேலன் என்ற புராணக் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.

டோலிவுட் ‘மெகாஸ்டார்' சிரஞ்சீவி ‘நமோ' என்ற படத்தின் ட்ரெய்லரை பகிர்ந்துள்ளார். இப்படம் மோலிவுட் நடிகர் ஜெயராம் நடித்த சமஸ்கிருத ‘கால நாடகம்' என்று கூறப்படுகிறது.

‘சை ரா நரசிம்ம ரெட்டி' நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் கணக்கில் வரவிருக்கும் நமோ படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். அவர் தனது ட்வீட்டில், “நமோ- சமஸ்கிருத படத்தின் டிரெய்லரை வழங்குகிறேன். திரு. ஜெயராம் திரைப்படத்திற்கான உருமாற்றம் மற்றும் அவரது ஆத்மார்த்தமான செயலைப் பார்த்து மெய்மறந்து போனேன். நமோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். சமோதரர் ஜெயராமின் அற்புதமான முயற்சி இதயங்களையும், விருதுகளையும் வெல்லும்” என்று பதிவிட்டிருந்தார்.

நமோ படத்திற்காக ஜெயராம் எடை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் விஜீஷ் மணி தலைமையிலான இந்த படத்தில் குசேலன் என்ற புராணக் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.

'மெகாஸ்டார்' சிரஞ்சீவி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஆச்சார்யா' படத்தில் காணப்படுவார். இப்படத்தினை கோர்தலா சிவா இயக்குகிறார். சிரஞீவியின் மகனும் நடிகருமான ராம் சரன் இப்படத்தை தயாரிக்கிறார், அதோடு படத்தில் ஒரு கவுரவ வேடத்திலும் தோன்றவுள்ளார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com