முகப்புmollywood

லாக்டவுனில் புகைப்பட கலைஞராக மீண்டும் உருவெடுத்த ‘மெகா ஸ்டார்’! வைரலாகும் ஃபோட்டோஸ்.!

  | June 23, 2020 21:49 IST
Mammootty

அழகான பறவைகளை க்ளிக் செய்துள்ள மம்மூட்டி, அவரது பதிவிற்கு “காலை விருந்தாளிகள்” என்று தலைப்பிட்டுள்ளார்.

பூட்டுதலின் போது மோலிவுட்டின் மெகா ஸ்டார் மம்மூட்டி தனது திறமைகளை வெளிப்படுத்திவருக்க்றார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசால் விதிக்கப்பட்டுள்ள பூட்டுதலில், தனது வீட்டில் பாதுகாப்பாக மற்றும் அமைதியான நேரத்தை அனுபவித்து வருகிறார் ‘மம்மூகா' என்று செல்லமாக அழைக்கப்படும் மம்மூட்டி.

இந்த இலவச நேரத்தில் தனது பழைய பொழுதுபோக்குகளை மெருகூட்ட முடிவு செய்துள்ள அவர், வீட்டிலிருந்தபடியே தனது கேமராவைக் கொண்டு சில புகைப்படங்களை கிளிக் செய்து வருகிறார். அவர் எடுத்த சில அழகான புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

qkfskod

அழகான பறவைகளை க்ளிக் செய்துள்ள மம்மூட்டி, அவரது பதிவிற்கு “காலை விருந்தாளிகள்” என்று தலைப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் எவரும், உண்மையில் மம்மூட்டி ஒரு நல்ல புகைப்படக் கலைஞர் தான், மெகா ஸ்டருக்கு புகைப்படம் எடுப்பதில் நல்ல உணர்வு இருப்பதையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com