முகப்புmollywood

புகைப்படத்துடன் சஞ்சய் தத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோகன்லால்.!

  | July 29, 2020 14:39 IST
Sanjay Dutt

இருவரும் ஒரு படத்திற்காக அணிசேர உள்ளார்கள் என்று நிறைய யூகங்கள் இருந்தன, ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக இல்லை.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சஞ்சய் தத்துடன் தனது மகிழ்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மோகன்லால், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ள சஞ்சு பாபா அன்பும் பிரார்த்தனைகளும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அவர்கள் இருவரும் ஒரு படத்திற்காக அணிசேர உள்ளார்கள் என்று நிறைய யூகங்கள் இருந்தன, ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக இல்லை. இதற்கிடையில், கன்னட திரையுலகில் கே.ஜி.எஃப் அத்தியாயம்: 2 மூலம் சஞ்சய் தத் அறிமுகமாகிறார், மிரட்டலான முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட்டது.

யாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கே.ஜி.எஃப்-2ல் ரவீனா டாண்டனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சஞ்சய் தத் ‘ஆதீரா' எனும் மிருகத்தனமான வில்லனாக நடிக்கிறார். படத்தில் ‘ஆதீரா'வின் தோற்றம் வைக்கிங்ஸின் மிருகத்தனமான வழிகளால் ஈர்க்கப்பட்டுள்ளது, இது ஆரம்பகால இடைக்கால ஸ்காண்டிநேவியாவின் நார்மன்களின் கதைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு தொடர்.

மோகன்லால் பற்றி பேசுகையில், அவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'மரைக்காயர்: அரபிகடலின் சிங்கம், எனும் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்த மலையாள படம் ரூ. 100 கோடி பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து, த்ரிஷ்யம்-2 மற்றும் ராம் எனும் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com