முகப்புmollywood

“விஜய் சூப்பர் ஸ்டார்தான் ஆனால் சிறந்த நடிகர் இல்லை” மலையாள நடிகரின் கருத்தால் கடுப்பான விஜய் ரசிகர்கள்

  | May 07, 2019 17:44 IST
Siddique

துனுக்குகள்

  • மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் இவர்
  • 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்
  • விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார்
 
மலையாள திரையுலகில்  தயாரிப்பாளராக இருக்கும் சித்திக், சுமார் 300 மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். பிரபலமான நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் தனியார் இணையதள ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
 
இதில் பேசிய அவர் எல்லா சினிமா துறையும் சூப்பர் ஸ்டார்களையே நம்பி உள்ளது. மதுர ராஜா, லூசிஃபர் போன்ற படங்களை எடுக்க மம்மூட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் நடிகர்கள் இருப்பது அவசியமாகிறது.என்னைப் போன்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டார் நடிகர்களால் தான் எங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது.
 
மலையாள திரைத்துறைக்கு மம்மூட்டி, மோகன்லால் என்ற இரண்டு பெரிய நடிகர்கள் இருப்பது அதிர்ஷ்டமே. இருவருமே சூப்பர் ஸ்டார். இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள்.
 
தமிழ்சினிமாவில் அப்படி இல்லை அங்கு உள்ள நிலைமை வேறு. விஜய் போன்றவர்கள் அங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவர் சிறந்த நடிகர் அல்ல. ஆனால் அவரது ஸ்டார் அந்தஸ்துதான் அவர் திரைத்துறையில் உயரக் காரணம். ஆனால் கமல்ஹாசன் சிறந்த நடிகர். அவர் சூப்பர் ஸ்டாரும் கூட” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்