முகப்புmollywood

நஸ்ரியா - ஃபஹத் ஃபாசிலுக்கு என்ன ஆச்சு..!! Trance பட போஸ்டரைப் பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்..

  | November 02, 2019 19:59 IST
Trance

வைரலாகும் நஸ்ரியாவின் ‘ட்ரான்ஸ்’ பட போஸ்டர்.

துனுக்குகள்

 • ‘ட்ரான்ஸ்’ படத்தில் ஃபஹத் ஃபாசில் - நஸ்ரியா இணைந்து நடிக்கின்றனர்.
 • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
 • இப்படத்தை அன்வர் ரஷீத் இயக்குகிறார்.
நஸ்ரியா மற்றும் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்த ‘Trance' எனும் மலையாள படத்தின் போஸ்டர்கள் வெளியாகி, வைரலாகிவருகிறது.

நேரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மலையாள நடிகை நஸ்ரியா. இவரது கியூட்டான எக்ஸ்ப்ரெஷன்களால் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும், இவர் தமிழில் நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும் மற்றும் திருமனம் எனும் நிக்கா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம் மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், நடிகர் ஃபஹத் ஃபாசிலை காதலித்து திருமனம் செய்துகொண்டார். திருமனத்திற்கு பிறகு எந்த படத்தில்லும் கமிட்டாகாத அவர், தற்போது ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நஸ்ரியாவும் ஃபஹத் ஃபாசிலும் இணைந்து நடித்துள்ள ‘ட்ரான்ஸ்' எனும் மலையாள படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் நஸ்ரியா குட்டைப் பாவாடை அணிந்தவாறு வாயில் சிகரெட்டுடன் ஸ்டைலாக நடந்து வருவகிறார். இந்த போஸ்டரை நஸ்ரியா தனது FB பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், சிகரெட்டுடனான அவரது லுக் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஃபஹத் ஃபாசில் இருக்கும் போஸ்டரில், அவர் மனநோயாளி போல உடையணிந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர்கள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com