முகப்புmollywood

நிவின் பாலியின் ‘மைக்கேல்’ ரிலீஸ் ப்ளான்

  | January 07, 2019 09:48 IST
Nivin Pauly

துனுக்குகள்

  • நிவின் பாலி கைவசம் 4 படங்கள் உள்ளது
  • ‘மைக்கேல்’ படத்தில் நிவின் பாலி டாக்டராக வலம் வரவுள்ளாராம்
  • இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்
மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸின்‘காயம்குளம் கொச்சுண்ணி' படத்துக்கு பிறகு நிவின் பாலி கைவசம் தியான் ஸ்ரீநிவாசனின் ‘லவ் ஆக்ஷன் டிராமா', கீது மோகன்தாஸின் ‘மூத்தோன்', ஹனீஃப் அதேனியின் ‘மைக்கேல்' மற்றும் ராஜீவ் ரவியின் ‘Thuramukham' ஆகிய 4 படங்கள் உள்ளது.

இதில் ‘மைக்கேல்' படத்தில் நிவின் பாலி டாக்டராக வலம் வரவுள்ளாராம். நிவின் பாலிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் டூயட் பாடி ஆடியுள்ளார்.
இதற்கு கோபி சுந்தர் இசையமைத்து வருகிறார். இதனை ‘ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி' நிறுவனம் சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற ஜனவரி 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்