முகப்புmollywood

'ஆடுஜீவிதம்' படக்குழுவினர் 58 பேருடன் வீடு திரும்பிய பிருத்விராஜ்.!

  | May 23, 2020 12:44 IST
Aadujeevitham

டெல்லியில் இருந்து மற்றொரு போக்குவரத்தின் மூலம் கொச்சிக்கு நேற்று வந்தடைந்தனர்.

ஜார்டனின் வாடி ரம் பாலைவனத்தில் சிக்கித் தவித்து வந்த மலையாள நட்சத்திரம் பிருத்விராஜ், 58 பேர் கொண்ட படக்குழுவுடன் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து, நேற்று காலை கொச்சிக்கு திரும்பினார்.

கொரோனா காரணமாக உலகின் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. அதையடுத்து கடந்த சில வாரங்களாக மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்' படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும் வீட்டிற்கு வர உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதற்கிடையில், அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் அவரும் அவரது குழுவினரும் நன்றாகவும், தவறாமல் குழு மருத்துவர் மற்றும் ஜோர்டான் அரசாங்க மருத்துவர்களால் சோதிக்கப்பட்டு வருகின்றோம் என்று கூறினார். மேலும், 17-ஆம் தேதி ‘ஆடுஜீவிதம்' படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

சுமார் இரண்டு மாதங்கள் ஜோர்டானில் சிக்கித் தவித்த பின்னர், மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், இயக்குநர் பிளெஸி மற்றும் 'ஆடுஜீவிதம்' படத்தின் 56 பேர் கொண்ட படக் குழுவினர் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். இந்த குழு மே 21 அன்று ஜோர்டானில் இருந்து சிறப்பு விமானத்தில் ஏறி வியாழக்கிழமை மாலை டெல்லியை அடைந்தது.

அதையடுத்து டெல்லியில் இருந்து மற்றொரு போக்குவரத்தின் மூலம் கேரளா- கொச்சிக்கு நேற்று வந்தடைந்தனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com