முகப்புmollywood

மோகன்லால் படத்தில் சர்ச்சை காட்சி ; கேரள முதல்வரிடம் புகார் அளித்த காவல் துறை சங்கம்

  | April 04, 2019 13:14 IST
Mohanlal

துனுக்குகள்

 • இப்படத்தை பிரித்விராஜ் இயக்கியுள்ளார்
 • மோகன்லால் இப்படத்தில் நடித்துள்ளார்
 • மஞ்சுவாரியர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லூசிபர்.  கேரளாவில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்களில் திரையிட்டுள்ளனர். படத்தில்  அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இதில் ஒரு  காட்சியில், மோகன்லால் செருப்பு அணிந்த காலுடன் போலீஸ் அதிகாரியின் மார்பில் மிதிப்பது போன்ற காட்சி படத்தில் உள்ளது. இதை சுவரொட்டிகளாக அச்சிட்டும் கேரளாவில் ஒட்டி உள்ளனர்.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர்.  அவர்களுக்கென்று உருவாக்கப்பட்டிருக்கும் சங்கம் மூலம் கண்டித்து கேரள முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.
 
புகார் மனுவில், “மக்கள் மத்தியில் போலீசார் மீது அவப்பெயரை ஏற்படுத்துவது போல் இந்த காட்சி உள்ளது. முன்பு குற்றவாளிகளே போலீஸ் மீது கைவைக்க பயந்தனர். தற்போது பொதுமக்கள்கூட போலீசை தாக்க அஞ்சாத நிலை உள்ளது. இந்த மாதிரி படங்கள் இளைஞர்கள் மனதை கெடுத்து போலீசை தாக்க தூண்டிவிடுகின்றன. புகையிலை, மது அருந்துவது தவறு என்று படத்தில் வாசகம் இருப்பதுபோல், போலீசாரை தாக்குவது தவறு என்ற வாசகமும் இடம்பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com