முகப்புmollywood

மலையாள இயக்குநர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் சசிகுமார்…!

  | May 30, 2019 19:19 IST
Sasikumar

துனுக்குகள்

  • ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்குகிறார்
  • ரோனி ராப்பில் இப்படத்திற்கு இசையமைக்கிறார்
  • கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார்
நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் நடிகரும் இயக்குநருமான சசிகுமார்.  இதனைத்தொடர்ந்து மலையாள இயக்குநர் ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிக்கிறார்  என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 
இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக்கின் 14-வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்திற்கு ரோனி ராப்பில் இசையமைக்கிறார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்