முகப்புmollywood

இரண்டாவது முறையாக மலையாள படத்தில் நடிக்கும் அதிதி ராவ்! 

  | September 21, 2019 10:28 IST
Aditi Rao

துனுக்குகள்

 • இரண்டாவது முறையாக மலையாள சினிமாவிற்கு போகிறார் இவர்
 • உதயநிதி நடிக்கும் சைகோ படத்தில் நடித்து வருகிறார்
 • விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கிறார் இவர்
காற்று வெளியிடை , செக்கச்சிவந்த வானம், ஆகிய தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் பாலிவுட் நடிகை அதிதி ராவ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2006 ம் ஆண்டு மலையாளத்தில் ரஞ்சித் இயக்கிய ப்ரஜாபதி என்கிற படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் வேறு எந்த மலையாள படங்களிலும் நடிக்க வில்லை.

இந்த நிலையில், 13 ஆண்டுகள் கழித்து மறுபடியும் மலையாள படம் ஒன்றில் நடிக்கிறார் அதிதி ராவ். ஜெயசூர்யா ஜோடியாக அவர் நடிக்கிறார். ‘சூபியும் சுஜாதயும்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, நரணிபுழா ஷாநவாஸ் இயக்குகிறார். மியூசிக்கல் ரொமான்டிக் படமாக உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு இன்று தொடங்க இருக்கிறது

தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘சைக்கோ' படத்தில் நடித்துள்ளார் அதிதி ராவ். இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இதுதவிர நானி ஜோடியாக ‘வி' என்ற தெலுங்குப் படத்திலும், விஜய் சேதுபதி ஜோடியாக ‘துக்ளக் தர்பார்' என்ற தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார். 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com