முகப்புmollywood

சன்னி லியோனியை பாடாய் படுத்திய ராஜு மாஸ்டர்……!

  | February 07, 2019 12:05 IST
Sunny Leone

துனுக்குகள்

  • மலையாளத்தில் மட்முட்டி நடிக்கும் படத்தில் இவர் நடனமாடி இருக்கிறார்
  • தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்
  • விஷால் நடிக்கும் படம் ஒன்றில் இவர் நடனமாட இருப்பதாக தகவல்
பாலிவுட், ஹாலிவுட் படங்களை தொடர்ந்து கோலிவுட்டிலும் நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்கள் அதிகம்.  தற்போது அவர் தென் இந்திய மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழில் “வடகறி” படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றிற்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
 
இன்னும் அந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து நீங்கவில்லை என்று அவரின் ரசிகர்கள் இன்றும் சொல்வதுண்டு. அந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கும் சிறப்பம்சம் கொண்டவர் சன்னி லியோன்.
 
தற்போது அவர் மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் “மதுர ராஜா” என்கிற படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றிற்கு நடனமாடி இருக்கிறார். இந்த பாடலுக்கு நடனமாடியதைப் பற்றி பேசிய அவர் “இந்த பாடலுக்கு வாயசைத்து பாடி, நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, சுலபமாகதான் இருந்தது. ஆனால் நடன இயக்குநர் ராஜு சுந்தரத்தின் நடன அசைவுகளை என்னால் எளிதில் பற்றிக் கொள்ள முடியவில்லை.
 
அவருடைய அசைவுகளை கூர்ந்து கவனித்து பயிற்சிக்கு பின்தான் என்னால் ஆட முடிந்தது. சிரமம் இருந்தாலும் படக்குழுவின் உற்சாகத்தால் நான் நடித்து முடித்தேன்” என்றிருக்கிறார். இவர் மலையாளத்தில் ஒரு படத்தில் கதா நாயகியாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கேரளா வரை வந்துட்டிங்க அப்படியே தமிழ் நாட்டிற்கு வந்து போங்கள் என்று அவரது ரசிகர்கள் தற்போது போர் கொடி தூக்கியுள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்