முகப்புmollywood

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்கும் சன்னி லியோன்

  | January 29, 2019 17:28 IST
Madura Raja

துனுக்குகள்

  • மம்முட்டி உடன் ‘மதுர ராஜா' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் சன்னி லியோன்
  • தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சன்னி லியோன்
  • தமிழில் விஷாலின் ‘அயோக்யா' திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்
ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் சன்னி லியோன்.

இவர் தற்போது தென் இந்திய மொழிப்படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடி இருந்தார். அவர் ஆட்டத்தைப் பார்க்கவே ரசிகர்கள் அந்த படத்திற்கு போனார்கள் என்கிற விமர்சனம் அப்போது எழுந்தது.
 
தற்போது அவர் தமிழில் விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘அயோக்யா' என்ற திரைப்படத்தில் சன்னி லியோன் பணியாற்றி வருகிறார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி உடன் ‘மதுர ராஜா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .  சரித்திர நாயகியாக சன்னி லியோன் நடிக்கும் 'வீரமாதேவி' திரைப்படமும் விரைவில் திரைக்கு வர  இருக்கிறது. இந்த படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  மற்றொரு மலையாளப் படமான ‘ரங்கீலா'விலும் முக்கியக் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்து வருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன. தென்னிந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்