முகப்புmollywood

"மகேஷ் இயக்கத்தில் வெள்ளரிக்கா பட்டணம்" - களமிறங்கும் நடிகை மஞ்சு வாரியர்..!

  | September 13, 2020 11:23 IST
Vellarikka Pattanam

துனுக்குகள்

 • 1995ம் ஆண்டு வெளிவந்த சக்ஷ்யம் என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில்
 • இந்நிலையில் அவருடைய புதிய திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது
 • வெள்ளரிக்கா பட்டணம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சோப்பின் ஷாஹிர்
1995ம் ஆண்டு வெளிவந்த சக்ஷ்யம் என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மஞ்சு வாரியர். அடுத்து வந்த 4 ஆண்டுகளுக்குள் (1999ம் ஆண்டுக்குள்) சுமார் 20 படங்களில் நடித்து அசத்தினார். மலையாளத்தில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைத்து நடித்த மஞ்சு, மிக விரைவில் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். ஆனால் அவருக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கடைசிவரை கிடைக்கவில்லை. 

மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் முடித்த மஞ்சு, அதன் பின் திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து ஒதுங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் விவாகரத்து ஆனா நிலையில், சுமார் 15 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் திரைத்துறையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். 2014ம் ஆண்டு வெளியான 'How old are you' (2015ம் ஆண்டு தமிழில் ஜோதிகா நடித்து வெளியான 36 வயதினிலே) மோகன் லாலுடன் 'லூசிபர்', தனுஷுடன் 'அசுரன்' என்று தொடர்ச்சியாக படங்களில் நடித்து 15 ஆண்டுகள் இடைவெளி விட்டு வந்தாலும் தனக்கு இன்றும் மார்க்கெட் குறையவில்லை என்று நிரூபித்தார். 

இந்நிலையில் அவருடைய புதிய திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. மகேஷ் வெட்டியார் என்பவர் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படத்தில் நடித்து வருகின்றார். வெள்ளரிக்கா பட்டணம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சோப்பின் ஷாஹிர் என்பவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த தகவலை பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com