முகப்புmollywood

மோகன்லாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மெகா ஸ்டார்.!

  | May 21, 2020 18:35 IST
Happy Birthday

"நீங்கள் இருக்கும் அதே காலகட்டத்தில் திரைத்துறையில் இருப்பதில் பெருமை கொள்கிறேன்"

இன்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு நாளில் அவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும், ஏராளமான ரசிகர்களும் வாழ்த்துக்களை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துவருகின்றனர்.

முன்னதாக, உலக நாயகன் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், தற்போது டோலிவுட் ‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் “இனிய 60வது பிறந்தநாள் என் அன்பான லாலெட்டன் மோகன்லால். உங்களைப் போன்ற ஒரு வெர்சடைல் ஆக்டிங் லெஜண்ட் & சூப்பர் ஸ்டார் இருக்கும் அதே காலகட்டத்தில் திரைத்துறையில் இருப்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து நடிப்பு சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் வளப்படுத்தவும் மற்றும் பல ஆண்டுகளாக பார்வையாளர்களை மகிழ்விக்கவும் வேண்டும்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com