முகப்புmollywood

துல்கர் சல்மான் குரலில் ‘உன்னிமாயே’ பாடல் வெளியானது..!

  | July 28, 2020 23:55 IST
Dulquer Salmaan

இப்படத்தின் தயாரிப்பாளரான துல்கர் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

மணியாரயிலே அசோகன் எனும் மலையாள படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் பாடியுள்ள ‘உன்னிமாயே' என்ற பாடல் வெளியாகியுள்ளது. ஒரு வேடிக்கையான மற்றும் வித்தியாசமான வழியில் ஹீரோ தன் காதலை விவரிக்க முயற்சிக்கும் விதமான இப்படல் அமைந்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகனான க்ரிகோரியும் துல்கருடன் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் வரிகளை ஷிஹாஸ் அம்மட்கோயா எழுத, ஸ்ரீஹரி கே நாயர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தயாரிப்பாளரான துல்கர் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு இப்பாடலை வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இதோ ஒரு கடைசி ஆச்சரியம்! கிரெக்கும் நானும் எங்கள் குரல்வளைகளை கொஞ்சம் நீட்ட முயற்சிக்கிறோம். ‘Maniyarayile Ashokan' பட ‘Unnimaya' பாடலைப் பதிவுசெய்த வீடியோ இங்கே. நீங்கள் அதை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் முன்பு கல்யாணம் படத்திற்காக பாடியிருந்தனர். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோரும் நடிக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com