முகப்புவிமர்சனம்

போட்டிப் போடும் காதல் - “100 சதவீதம் காதல்” விமர்சனம்!

  | Friday, October 11, 2019

Rating:

போட்டிப் போடும் காதல் - “100 சதவீதம் காதல்” விமர்சனம்!
 • பிரிவுவகை:
  லவ் டிராமா
 • நடிகர்கள்:
  ஜி.வி.பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே
 • இயக்குனர்:
  சந்திரமௌலி
 • தயாரிப்பாளர்:
  சுகுமார்

காதல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், நட்பு இவை அனைத்தும் தமிழ் சினிமாவில் மக்களை உணர்வு பூர்வமாக கதையோடு பயணிக்க வைக்க படைப்பாளிகள் கையாண்டு வரும் உத்தி. நூற்றாண்டு கால தமிழ் சினிமாவில் எல்லாம் நவீனமயமாக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சாகவிடாமல் காதல், உறவுகள், போன்ற விஷயங்களுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறது சினிமா. அதன் அடிப்படையில் ஒரு காதலர்களுக்கிடையில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படமே 100சதவீதம் காதல்.

pohfj5po

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் “100%லவ்” என்கிற தலைப்பில் வெளியான இப்படத்தை தற்போது சந்திரமௌலி தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். கல்லூரி மாணவனாக ஜி.வி. பிரகாஷ் நடிக்க இவரின் மாமன் மகளாக ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார். இவர்களுக்குள் ஏற்படும் அன்பும், நான்தான் என்கிற அகங்காரத்தின் பிடிவாதமே படத்தை தாங்கி பிடிக்கும் கதைக்கரு. ஒருவருக்கொருவர் விடாபிடியாக இருப்பதால் பிரிகிறார்கள். பின் எப்படி இருவரும் ஒன்று சேர்கிறார்கள் என்பதே திரைக்கதை.

என்னரேமும் படிப்பு படிப்பு என இருக்கும் ஜி.வி. 10ம் வகுப்பு,12ம் வகுப்பு என்று எல்லாவற்றிலும் முதலிடம் பெறுபவராக இருக்கிறார். இதனால் நம்பர் 1 என்பது இவருக்கு ஒரு போதையாகவே மாறிவிடுகிறது. கல்லூரியிலும் இவர்தான் முதலிடம். இவருக்கு போட்டியாக யாரும் இல்லை என்று கர்வமாக இருக்கும் போது. கிராமத்தில் இருக்கும் தன் மாமன் மகள் ஷாலினி பாண்டே தன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். தமிழ்வழிக்கல்வி பயின்று இருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு ஆங்கில வழி கல்லூரி படிப்பில் திணருகிறார். இவருக்கு உதவியாக ஜி.வி. இருக்க ஜி.வியை முந்திக்கொண்டு ஷாலினி முதல் இடத்தை பிடிக்கிறார். இதனால் ஷாலினி மீது வெறுப்பாகும் நாயகன். போட்டிப்போட்டுக்கொண்டு மீண்டும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பல வேலைகளை செய்கிறார். இதற்கிடையில் இன்னொரு மாணவன் முதல் இடம் பிடிக்க இரண்டு பேரும் போட்டிப்போட்டுக்கொண்டு அவனை வீழ்த்த முடிவு செய்கிறார்கள். இதனால் ஷாலினி பாண்டே அந்த மாணவரை காதலிப்பதாக நடிக்கிறார். ஆனால் ஜி.வியை உண்மையாக காதலிக்கிறர். ஒரு வழியாக மீண்டும் ஜி.வி.முதலிடம் வர இருவருக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னையை கடந்து இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

093b2kto

பல இடங்களில் நம்பமுடியாத பல விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தான்தான் என்கிற அகங்காரம் அதாவாது காதலர்களுக்கிடையே ஆன ஈகோ பல காதலர்கள் பிரிவதற்கு காரணமாக இருக்கிறது. இந்த விஷயத்தை கையில் எடுத்து திரைக்கதை அமைந்திருக்கிறது. எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் இவர்களின் அன்பு எப்படி 100 சதவீதம் காதலாக இருக்க முடியும்?

சாதி, மதம், மொழி, குலம், கோத்திரம் இவை எல்லாம் கடந்து உணர்வு பூர்வமாக ஒருவரை ஒருவர் புரிந்து இணைவதே காதல். ஒரே குடும்பத்தில் இருக்கும் உறவு முறைய அடிப்படையிலான ஆணுக்கும்ம் பெண்ணுக்குள் இடையே உள்ள உறவை காதல் என எப்படி கூறுவது. இதுவும் இப்படத்தின் தலைப்பிற்கு கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் தாத்தா பாட்டி கதாபாத்திரத்தில் வரும் நாசரும் அவரது மனைவியின் காதல்தான் 100 காதலாக இருந்தது.

இசை நடிப்பு என இரு துறைகளிலும் கவனம் செலுத்தி பாராட்டுகளை பெற்று வரும் ஜி.வி. தனக்கு கொடுக்கப்பட்ட காபாத்திரத்தை சரியாக செய்து முடித்துள்ளார். நான் தான் என்கிற அகங்காரத்தை வெளிபடுத்திய விதம் நன்றாக இருந்தது. அவ்வப்போது ஷாலினி பாண்டேவின் அழகில் மயங்கும் ஜி.வி.யிடம் சில தடுமாற்றம் தெரிந்தது. படத்தின் முதல் பாதியில் குஷி படத்தைப்போலவே நாயகியின் இடுப்பை காட்சி படுத்தி எதையோ சொல்ல வருகிறார் இயக்குனர். அது தேவை இல்லை என்றே தோன்றியது.

ஷாலினி பாண்டே ஊடல்,கூடல்,அமைதி என ஜி.வி.யைவிட ஒரு படி மேலே நடித்து பாராட்டுகளை பெறுகிறார். முதல் பாதி முழுவதும் காதலில் உருகும் ஷாலினி, இரண்டாம் பாதியில் மிரட்டுகிறார். தேவையான இடங்களில் பொறுமையும், கோபத்தையும் வெளிபடுத்தி கை தட்டல் பெறுகிறர்.

காமெடி என்று பெரிதாக எதுவும் தென் பட்ட மாதிரி இல்லை. நாயகிக்கு நாயகனுக்கும் இடையேயான போட்டியிலே கதை நகர்வதால் ஒரே இடத்தை சுற்றியது போல் இருந்தது. ஐந்தாறு குழந்தைகளின் பேச்சு ரசிக்க வைத்தன. தம்பி ராமையா கதாபாத்திரம் தேவைக்கு அதிகம் என்றே தோன்றியது.

பாடல்கள் பெரிதாய் நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசையில் ஜி.வி. கைவண்ணம் சிறப்பு. ஒளிப்பதிவு வீட்டையும், கல்லூரியையும் விட்டு எங்கேயும் போகவில்லை.வேண்டியதை படம் பிடித்து பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தொகுப்பாளர் இன்றும் நிறைய வெட்டி இருக்கலாம் என்று தோன்றியது. மொத்தத்தில் 100 சதவீதம் காதல் இன்னும் முயற்சி செய்திருக்கலாம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்