முகப்புவிமர்சனம்

அதிரடி ஆக்ஷன் நிறைந்த படம் “ஆக்ஷன்” - விமர்சனம்!

  | Saturday, November 16, 2019

Rating:

அதிரடி ஆக்ஷன் நிறைந்த படம் “ஆக்ஷன்” - விமர்சனம்!
 • நடிகர்கள்:
  vishal, Aishwarya lakshmi, ramki, Tamannaah , yogi babu
 • இயக்குனர்:
  Sundar C
 • தயாரிப்பாளர்:
  R.Ravindran
 • எழுதியவர்:
  Subha
 • பாடல்கள்:
  Hiphop Tamizh

அரசியலில் இருக்கும் அண்ணனையும், காதலியையும் கொன்ற தீவிரவாதியை தேடி கொல்லும்  பழிவாங்கும் படமே ‘ஆக்ஷன்’.
 
 தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் பழ.கருப்பையாயா அரசியலில் ஓய்வு பெறுவதற்காக தன் மூத்த மகனான ராம்கியை கட்சியின் தலைமையில் அமர்த்த முடிவு செய்கிறார். இந்த கட்சி தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி கூட்டம் நடத்துகிறார்கள். இந்நிலையில் ராணுவத்தில் கமெண்டராக பணியாற்றும் இளைய மகன் விஷாலும் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்.
 
இந்த கூட்டத்திற்கு தேசிய தலைவர் ஒருவர் வருகிறார், அவரை கொல்வதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு கட்சி மேடையில் வெடிகுண்டு வைத்து கொல்கிறார்கள். இந்த சம்பவத்தில் அந்த தலைவர் உயிரிழக்கிறார். விஷாலின் காதலியான ஐஷ்வர்யா லக்ஷ்மியையும், ராம்கியையும் அந்த கும்பல் கொன்று விடுகிறது. தேசிய தலைவரின் இந்த கொலையில் ராம்கிக்கு பங்கு இருக்கிறது என செய்தி பரவுகிறது. தன் குடும்பத்தின் மீது விழுந்த பழியை துடைக்கவும், அண்ணனையும் காதலியையும் கொன்ற தீவிரவாதியை கொல்ல விஷால் செய்யும் சாகசமே படத்தின் திரைக்கதை.
 
 வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு இயக்குநர் சுந்தர் சி இயக்கி இருக்கும் படம் “ஆக்ஷன்”. குடும்பம், காதல், காமெடி, ஆக்ஷன், ஆங்காங்கே மசாலாவையும் தூவி ஒரு கலவையாக்கி இருக்கிறார். பழிக்கு பழி என்கிற பழைய சினிமா கட்டமைப்பை கையில் எடுத்தாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக்கி பார்வையாளர்களை சீட்டிலே அமர வைக்க பாடுபட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. சுந்தர் சி படம் என்றாலே காமெடியும், ஐட்டம் சாங்கும் இடம் பெறுவது வழக்கம் அதை இந்த படமும் பூர்த்தி செய்கிறது. பாகிஸ்தான் வெறுப்பி அரசியலையும் சுந்தர் சி இந்த படத்தில் திணித்திருக்கிறார். தீவிரவாதிகள் என்றால் அவர்கள் முஸ்லீமாகதான் இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு சுந்தர் சி வந்திருப்பது வேதனை. அதனை சமாதான படுத்துவதற்காக இன்னொரு முஸ்லீம் உளவாளியாகவும் விஷாலுக்கு ஆதரவாகவும் காண்பித்திருக்கிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படத்தில் ஆக்ஷன் காட்சிகளை மிரட்டி இருக்கிறார். படத்தில் சில இடங்களில் லாஜிக் பிரச்னைகளும் சூழ்ந்துக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.
 
 ‘அயோக்யா’ படத்தைத் தொடர்ந்து விஷால் இந்த படத்தில் தனக்கான இடத்தை மீண்டும் தக்கவைத்திருகிறார். காதல் செய்யும் செய்யும் போதும் அதிரடி சண்டைகாட்சிகளிலும் தனக்கேயுரிய பாவனையில் மிரட்டியிருக்கிறார். “அயோக்யா” படத்தின் தோல்வியை அடுத்து இந்த படம் அவருக்கு கை கொடுத்திருக்கிறது எனலாம்.
 
கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்தெடுக்கும் தமன்னா இந்த படத்தில் அவருக்கான கதாபாத்திரத்தை மிக அழகாக பூர்த்தி செய்திருக்கிறார். இன்னும் கூட அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. காதல் காட்சிகள் இல்லை என்றாலும் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளில் அசத்தி பார்வையாளர்களின் கவனத்தை பெறுகிறார். சில மணித்துளிகளே வந்து போதும் ஐஷ்வர்யா லக்ஷ்மி தன் நாணத்தாலும் காதல் செய்யும் அழகியலிலும் கவனம் பெறுகிறார். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகும் யோகி எப்போதும் போல் தன் இயல்பான நடிப்பில் சிரிக்க வைத்துட்டு பறக்கிறார். அவருக்கு திரைக்கதையில் இன்னும் கூட அதிக நேரம் கொடுத்திருக்கலாம்.
 
பாடல்கள் படத்திற்கு பலம்  கொடுக்கவில்லை என்றால் ஹிப்பாப் ஆதியின் பின்னணி இசையில் மிரட்டலாக அமைந்திருக்கிறது. லண்டன், பாகிஸ்தான், என இன்னும் சில நாடுகளில் கேமிரா பதிவு செய்த விதம் பிரமாதம். மொத்தத்தில் படத்திற்கு ஏற்றவாறு ஆக்ஷ்ன் நிறைந்த படம் ‘ஆக்ஷன்’.
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com