முகப்புவிமர்சனம்

சாதிக்கெதிராய் சாட்டையை சுழற்றும் ‘அடுத்த சாட்டை’ – விமர்சனம்!

  | Saturday, January 25, 2020

Rating:

சாதிக்கெதிராய் சாட்டையை சுழற்றும் ‘அடுத்த சாட்டை’ – விமர்சனம்!
 • பிரிவுவகை:
  சோஷியல் டிராமா
 • நடிகர்கள்:
  சமுத்திரகனி, அதுல்யா,
 • இயக்குனர்:
  அன்பழகன்
 • பாடல்கள்:
  ஜஸ்டின் பிரபாகரன்

கடந்த 2012- ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சாட்டை படத்தின் நீட்சியாக அடுத்த சாட்டை திரைப்படம் வந்திருக்கிறது. பள்ளிகளில் உள்ள ஆதிக்க மனநிலையையும் ஆசிரியர்கள் மாணவர்களை அனுகும் முறையையும் பதிவு செய்திருந்த சாட்டை திரைப்படம் ‘அடுத்த சாட்டை’ மூலம் அடுத்த தளத்திற்கு நகர்ந்திருக்கிறது.
 
கல்லூரியில் மாணவர்களுக்கெதிரான ஆசிரியர்களின் ஆதிக்க நிலையையும், மாணவர்களிடையே புறையோடி கிடக்கும் சாதிய பாகுபாட்டையும் கேள்விக்குட்படுத்தி சீர்திருத்தம் செய்யும் கதைதான் ‘ஆடுத்த சாட்டை’.
 
தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக வரும் சமுத்திரகனி மாணவர்களிடையே மிக நெருக்கமானவராக இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்களை தவிற மற்றவர்கள் மாணவர்களிடம் கடுமையாகவும் சாதிய பாகுபாட்டோடும் நடந்துக்கொள்கிறார்கள். சாதிய மனநிலை, ஆசிரியர்களிடம் மட்டும் அல்ல அந்த கல்லூரி மாணவர்களிடமும் மோலோங்கி இருக்கிறது. மாணவர்களையும் ஆசிரியர்களையும் தமிழ் பேராசிரியராக இருக்கும் சமுத்திரகனி எப்படி சீர் திருத்தி நல்வழி படுத்துகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
 
இயக்குநர் அன்பழகன் சாட்டை படத்தின் நீட்சியாகவே தன் கருத்துகளை பள்ளியில் இருந்து தற்போது கல்லூரிக்கு கடத்தி இருக்கிறார். சமூகத்தில் புறையோடி கிடக்கும் சாதி ஏற்றதாழ்வுகளை மாணவர்களிடம் கடத்த கூடாது என்கிற அவருடைய எண்ணம் வரவேற்கத்தக்கது. இத்தகைய பிரச்சாரத்தை தன் படைப்புவழியாக மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறார். திரைப்படமாக அடுத்த சாட்டை முழுமை அடைந்திருக்கிறதா என்றால் கேள்விக்குறியதுதான்.
 
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு நேர்மை சேர்த்திருக்கிறார். பல இடங்களில் சமரசம் செய்துகொள்கிறார். சமூகத்தில் உள்ள அவல நிலைகளைப் பற்றியும் வந்துபோகிறது வசனங்கள். படம் நிறைய கருத்துகளை வாரி இறைத்திருக்கிறார். வசனங்களால் படம் சூழப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சமீக காலங்களில் வந்த திரைப்படங்களில் கேட்ட வசனங்களை மீண்டும் கேட்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அவர் கையில் எடுத்திருக்கும் பிரச்னை மிகவும் சவாலானது என்பதற்காகவே அவரை பாராட்டலாம். திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிலாம்.
 
சமுத்திரகனி முற்போக்கு பேராசிரியராக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். நிதானமான அனுபவ நடிப்பில் பாராட்டுகளை பெறுகிறார். நடிகை அதுல்யாவின் நடிப்பு இயல்பாக இருந்தது. தம்பி ராமய்யாவின் மிடுக்கான நடிப்பு நகைச்சுவை கலந்த கவனம் பெற்றிருந்தது. படத்திற்க பாடல்களும் பின்னணி இசையும் ஒளிப்பதியும் இன்னொரு பலமாக அமைந்திருந்தது. மொத்தத்தில் அடுத்த சாட்டை சமூகத்திற்க எதிரான சாதிய பிரச்னையை எதிர்த்து அடித்திருக்கிறது.
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com