முகப்புவிமர்சனம்

கிளைமாக்ஸில் அனைவரின் யூகிப்பயும் தவிடுபொடியாக்கிய 'மாஃபியா' - விமர்சனம்!

  | Friday, February 21, 2020

Rating:

கிளைமாக்ஸில் அனைவரின் யூகிப்பயும் தவிடுபொடியாக்கிய 'மாஃபியா' - விமர்சனம்!
 • பிரிவுவகை:
  ஆக்ஷன் திரில்லர்
 • நடிகர்கள்:
  அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர், தலைவாசல் விஜய்
 • இயக்குனர்:
  கார்த்திக் நரேன்
 • பாடல்கள்:
  Jakes Bejoy

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர்கள் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள படம் தான் 'மாஃபியா அத்தியாயம் - 1'. மேற்கத்திய கலாச்சார பாணியில் அழகான பாடலுடன் படம் துவங்க, சற்று நிதானமாகவே காட்சிகள் நகர்கிறது. சிறுவயதில் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிறகாக, போதை பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரியாக வலம்வந்து மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அருண் விஜய். நாயகன், நாயகி, வில்லன் மற்றும் சிலர் என்று (படத்திற்கு தேவையான) அளவான வெகு சில கதாபாத்திரங்களே கொண்ட கதைக்களம், ஆரம்பத்தில் ரசிகர்கள் வெகு சுலபத்தில் யூகிக்கும் வண்ணமே நகர்கின்றது. 

Jakes Bejoy இசையில் 'வேடன் வந்தாச்சோ' பாடலுக்கு ஒரு சபாஷ். கதையில் அடுத்தபடியாக ஹீரோவிற்கு வேண்டியவர்கள் இறக்க, கெத்தாக களமிறங்குகிறார் வில்லன். அருண் விஜய்க்கு இணையாக பிரசன்னாவிற்கும் மாஸ் காட்சிகளை அமைத்திருப்பது, கார்த்திக் நரேன் திரைக்கதைகயை கையாளும் யுக்தியை காட்டுகின்றது. ஹீரோ சற்றும் எதிர்பார்க்காத அளவில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் அத்துணை இடங்களிலும் கைதட்டல் பெறுகிறார் வில்லன் பிரசன்னா. 

இருவரின் மோதலில் அடுத்த நிலை என்னவென்று கூறும் முன் வருகிறது இடைவேளை    படம் மீண்டும் தொடங்க, ஹீரோ மற்றும் வில்லனின் சண்டை மீண்டும் தொடங்குகிறது. அரிவாள், கத்தி, கொட்டும் ரத்தம் என்று எதுவும் இல்லாமல், மாஃபியா என்ற பெயர்க்கு ஏற்ப அளவான சண்டை காட்சிகளுடன் சற்று வேகத்துடன் நகர்கிறது இரண்டாம் கட்டம். நாயகனுக்கு இணையாக நாயகி பிரியா பவானி சங்கரும் துடிப்பான கதாபாத்திரத்தில் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை கட்சியில் ப்ரியாவின் நடிப்பு மாஸ். இறுதியில் வில்லனை தேடி கண்டுபிடித்த ஹீரோவிற்கு காத்திருக்கிறது ஒரு ஷாக். ஷாக் கொடுத்தது யார் ?, வில்லனை ஹீரோ கொன்றாரா ?. என்பதே மிதி கதை. துருவங்கள் 16 படத்தை ஒப்பிடும்போது திரைக்கதை சற்று தொய்வுடன் காணப்பட்டது என்பது ரசிகர்களின் கருத்து.   

 எது எப்படி இருந்தாலும், அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரின் யூகிப்பும் தவிடுபொடியாக, அருண் விஜய் மற்றும் பிரசன்னாவின் நடிப்பின் வழியாக அரங்கம் அதிரும் கைதட்டகளை பெறுகிறார் கார்த்திக் நரேன்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்