முகப்புவிமர்சனம்

கலப்படம் இல்லாத உணவுக்காக போராடும் அருவம் – "அருவம்" விமர்சனம்

  | Saturday, October 12, 2019

Rating:

கலப்படம் இல்லாத உணவுக்காக போராடும் அருவம் –
 • பிரிவுவகை:
  திகில் டிராமா
 • நடிகர்கள்:
  சித்தார்த், கேத்ரின் தெரசா
 • இயக்குனர்:
  சாய் ஷேகர்
 • தயாரிப்பாளர்:
  டிரைடன்ட் ஆர்ட்ஸ்
 • பாடல்கள்:
  எஸ்.எஸ். தமன்

உணவு பாதுகாப்புதுறையின் உதவி ஆணையராக பணியாற்றும் நேர்மையான அதிகாரி சில எதிரிகளால் கொல்லப்படுகிறார். அவரது ஆவி அவரின் காதலியின் உடலுக்குள் புகுந்து தன் எதிரிகளை கொன்று உணவு கலப்படத்தை தடுக்க போராட உருவமாக இருந்து அருவமாகும் கதை தான் ‘அருவம்’.

அரன்மணை 2, அவள், உள்ளிட்ட திகில் படங்களைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் தேர்ந்தெடுத்து நடித்துள்ள திகில் படம் ‘அருவம்’. தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறையின் உதவி ஆணையராக பணியாற்றுகிறார் சித்தார்த். உணவு கலப்படத்தை வேறோடு அழிக்கும் கனவுடன் தன் வேலையை தீவிரமாக செய்கிறார். இதனால் அரசியல்வாதிகள் சில முக்கிய தொழிலதிபர்களின் கோபத்திற்கு உள்ளாகிறார் சித்தார்த். இதனால் எதிரிகள் அவரை கொன்று விடுகிறார்கள். இதன் பிறகு சில தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மர்மான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களை யார் கொன்றது. எதர்கான இந்த கொலைகள் நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

vtig1oa

நேர்மையான அதிகாரி கதாபாத்திரத்தில் சித்தார்த் உரிய மிடுக்கையும், தோற்றத்தையும் வெளிபடுத்தியுள்ளார். காதலியிடம் பேசும்போது பணிவும் முதிர்ச்சியும் வெளிப்படுத்தும் விதம் பாராட்டுக்குறியது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எவ்வித குறையும் இல்லாமல் முடித்து பாராட்டுகளை பெறுகிறார்.

சிறு உயிரினங்ககுக்கு கூட தீங்கு நினைக்காத அன்பு நிறைந்த ஒரு எளிய கதாபாத்திரத்தில் நடிகை கேத்திரின் தெரசா நடித்துள்ளார்.  முகர்ந்து பார்க்கு உணர்வு இல்லாத புது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த  சிறு குறை சிறு வயதில் தன் தாயை அவர் இழக்கிறார். இந்த விபத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கும் நாயகி திருமணம் வேண்டாம் என்பதில் முனைப்போடு இருக்கிறார். முதலில் சித்தார்த்தை காதலிக்க மறுக்கும் இவர் பின் காதலிக்கிறார். காதலை மறுக்கும் போதும்,  காதலை ஏற்கும் போதும் தனது எளிமையான நடிப்பில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கிறார். அவரின் குறும்புத்தனம் சில இடங்களில் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது என்பதையும் தவிர்க்க முடியாது. மற்ற விதத்தில் கேத்திரினா தெரசா இந்த படத்திற்கு அன்பும் அழகும் செழிக்க படத்தை அலங்கரிக்கிறார்.

or4lqg98

நாயகி செய்யும் சிறு தொண்டுகளை பார்த்து காதலில் விழுகிறார் சித்தார்த். 90களின் காலகட்டத்திற்கு தமிழ் சினிமாவை இழுத்துச்சென்றுள்ளார் இயக்குநர். மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு கேத்ரின் தெரசாவிற்கு அமைந்துள்ள இந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வஞ்சகம் இல்லாமல் நடித்தாலும் இன்னும் கூட கவனமாக கையாண்டு இருக்கலாமோ என்று தோன்றியது.

உணவே மருந்து என நம் பண்பாடு இருக்க, இன்று பெருகி வரும் கலப்படத்தால் உணவே நோயாக மாறி நிற்கும் அவலத்தை அருவம் பேசுகிறது. டீ தூளில் கலப்படம், எண்ணெயில் கலப்படம்,பாலில் கலப்படம் இப்படி நாம் அன்றாடம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கலப்படங்களை பட்டியலிட்டு அதனால் வரக்கூடிய கேன்சர், பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் என சித்தார்த் பட்டியலிடும் அந்த பத்து நிமிடக் காட்சி மட்டும் கருத்து சொல்லக்கூயை காட்சியாகவும் நாம் தெரிந்துக்கொள்ளக்கூடிய காட்சியாகவும் இருக்கிறது.

கலப்படங்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது, கலப்படம் அத்தியாவசிய தேவையாகி விட்டது என வில்லன்களின் கேள்விகளுக்கு இந்த சமூகத்திடமும் பதில் இல்லாமல் இருப்பது வேதனைதான். என்றாலும் கூட குழந்தையைப்போல் நான் கலப்படத்தை அனுமதிக்க மாட்டேன் என சித்தார்த் அடம் பிடிக்கும் காட்சிகள் சிறுபிள்ளைத்தனமான அமைந்திருக்கிறது பாத்திரப்படைப்பு. படத்தின் முதல் பாதிவரை படத்தின் கதை என்ன, என்ன நடந்துக்கொண்டிருக்கிறது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. எடுத்துக்கொண்ட கதைக்கரு தீவிரமானதாக இருந்தாலும் அதற்காக அமைக்கப்பட்ட திரைக்கதை சற்று தொய்வுதான். மொத்தத்தில் ‘அருவம்’ படத்திற்கு இயக்குநர் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

எஸ்.எஸ்.தமனின் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்