முகப்புவிமர்சனம்

விசில் பறக்கும் “பிகில்” சத்தம் - “பிகில்”- விமர்சனம் - Bigil movie review

  | Saturday, October 26, 2019

Rating:

விசில் பறக்கும் “பிகில்” சத்தம்  -  “பிகில்”- விமர்சனம் - Bigil movie review
  • பிரிவுவகை:
    ஆக்ஷன் டிராமா
  • நடிகர்கள்:
    விஜய், நயன்தாரா, கதிர், யோகி பாபு
  • இயக்குனர்:
    அட்லி
  • தயாரிப்பாளர்:
    ஏ.ஜி.எஸ் நிறுவனம்
  • பாடல்கள்:
    ஏ.ஆர்.ரகுமான்

வடசென்னையில் உள்ள ஒரு பகுதியில் அந்த பகுதி மக்களின் நாயகனாக வலம் வருகிறார் மைக்கேல்(விஜய்). இவருடைய நண்பர் கதிர் தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருக்கிறார். விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி ஒரு சண்டையில் கதிரை கத்தியால் குத்திவிடுகிறார். இதனால் கதிரால் தன்னுடைய கால்பந்து அணிக்கு பயிற்சி கொடுக்க முடியாமல் போகிறது. இந்நிலையில் தமிழக கால்பந்து அணிக்கு ஒரு பயிற்சியாளர் தேவைபடுகிறார். கதிரின் ஆலோசனையில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக மாறுகிறார்.

u75gfnb

“இத்தனை நாளாக ரவுடியாக இருந்த ஒருவர் எப்படி எங்களுக்கு பயிற்சியாளராக இருக்க முடியும்” என கால்பந்து வீராங்கனைகள் விஜய்யை பயிற்சியாளராக ஏற்க மறுக்கிறார்கள். இத்தனைநாள் சண்டையும், கத்தியுமாக இருந்தவருக்கும் கால்பந்தாட்டத்திற்கும் என்ன தொடர்பு. அவர் ஏன் வீராங்கனைகள் மறுத்தும் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறார்? மைக்கேல் யார், ராயப்பன் யார்? மைக்கேலின் அணி வெற்றி பெற்றதா? கால்பந்தாட்ட விளையாட்டில் உள்ள அரசியல் என்ன என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை. இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லி. அது உண்மையாகவே விஜய் ரசிகர்களை திருப்த்தி படுத்தியிருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். விஜய்க்காகவே சித்தரிக்கப்பட்ட செயற்கை கதாபாத்திரங்களும், செயற்கை காட்சிகளும் படம் முழுவதும் பரவி கிடக்கிறது. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளும் கதாபாத்திர சித்தரிப்புகளும் ஏற்கனவே தமிழ் சினமா பார்த்து பழகிய பழைய சினிமா டெம்ப்பிளேட்டை நியாபகப்படுத்துகிறது. தமிழ்சினிமா காலத்திற்கு ஏற்றவாறு தன்னை நவீனப்படுத்திக்கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இன்றைய கால சினிமா ரசிகர்கள் சினிமாடிக் தொணியை விட்டு எதார்த்த கதைகளத்தை நேசிக்கும் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த படம் ஏமாற்றம்தான். பல காட்சிகள் பல திரைப்படங்களை நியாபகப்படுத்துகிறது. முதல்பாதிவரை ஏற்ற இறக்கமாக செல்கிறது திரைப்படம். இரண்டாம் பாதியில் கவனம் பெறுகிறது திரைக்கதை. வழக்கமாக விஜய் படத்தில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் இந்த படத்தில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

27cb75dg

இந்த படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நெற்றியில் பட்டை, கழுத்தில் சிலுவை, காவி வேட்டி என முதிச்சியான தோற்றத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கொஞ்சம் ஏற்புடையதாக இருக்கிறது. ஆனால் வயது முதிர்வுக்கும் உடல் மொழிக்கும், அவருக்காக வைக்கப்பட்டிருக்கம் சண்டைக்காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் லாஜிக் பிரச்னைகள் ஏராளம். நிதாதமான பேச்சு, பெறுமை, விளையாட்டிற்கு முன்னுறிமை கொடுப்பது போன்ற விஷயங்களை பேசும் போது ராயப்பன் கதாபாத்திரத்திற்கு நியாம் சேர்த்திருக்கிறார். ரவுடிகளை விளாசும் போதும், மகனை அரவனைக்கும் போதும் ராயப்பன் கவனம் பெறுகிறார். ‘கப்பு முக்கியம்’ என கூறும் போது பிகில் விசில் போடுகிறது. மைக்கேல் கதாபாத்திரத்தில் இளமை ததும்ப நல்ல கால்பந்தாட்ட வீரராகவே கண்முன் தோன்றுகிறார் விஜய். விளையாட்டில் அவரது துடிப்பும், வேகமும் உற்சாகப்படுத்துகிறது. மைக்கேலின் புத்திசாலிதனமும் விவேகமும் விஜய்யின் உழைப்பை வெளிபடுத்தியிருக்கிறது.

mealdi8

ரெபா மோனிகாவிடம் ஒரு குட்டி கதை சொல்லும் போதும், அப்பாவை கட்டி அனைக்கும் போதும், நயன்தாராவுடன் காதலை வெளிப்படுத்தும் போதும், போட்டி நடக்கும் போது உணர்ச்சியை வெளிபடுத்தும் போதும் அழுத்தமான நடிப்பை வெளிபடுத்துகிறார். மற்ற எல்லா இடங்களிலும் விஜய்க்காக சித்தரிக்கப்பட்ட மாஸ் காட்சிகள் மட்டுமே மிஞ்சுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகனை மய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் மற்ற கதாபாத்திரங்களில் எதிலும் வலுவில்லை. விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் நயன்தாரா பத்து நடிகர்களில் ஒருவாராகவே வந்து போகிறார். அவருக்கம் அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. வர்ஷா பொல்லம்மாவின் கணவனிடம் பெண்களின் கனவுகள் குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் பேசும் இடத்தில் நயன்தாரா கவனம் பெறுகிறார். எப்போதும் போல் யோகி பாபு தன் இயல்பான பேச்சால் சிரிக்க வைத்து அசத்தியிருக்கிறார். விஜய்யின் நண்பனாக வரும் கதிர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக ஏற்று கவனம் பெறுகிறார். விளையாட்டு வீராங்கனைகளாக நடித்திருக்கும் இந்துஜா, இந்திரஜா மற்ற அனைவரும் படத்தின் இன்னொரு பலமாக இருக்கிறார்கள். வில்லன்களாக வரும் டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் எப்போதும் ஏற்கும் வில்லத்தனத்தை ஏற்று தங்களுக்கான வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள்.

jf51pem8

கால்பந்தாட்ட போட்டி, கால் பந்தாட்ட மைதானம் விஜய்யின் சண்டைகாட்சி என தன்னுடைய கேமிராவில் கடத்தி பிரமிக்கவைக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. பாடல்களும் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. படத்தொகுப்பாளர் ரூபன் கொஞ்சம் காட்சிகளை குறைத்து படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். வன்முறைக்கு வன்முறை தீர்வு கிடையாது, கல்வியும் விளையாட்டும் வாழ்வை மாற்றும் என்கிற அடிப்படையில் கதைகளத்தை கொண்டு வந்ததைத்தவிற வேறு எதுவும் புதிதாக இல்லை. பெண்கள் தங்களுடைய கனவுகளை வென்றெடுக்க வேண்டும். அவர்கனை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் பாராட்டுக்குறியது. விஜய்காக ஒலிக்கும் பிகில் சத்தம் சற்று கதைக்காகவும் ஒலித்திருக்க வேண்டும். கோப்பை முக்கியம்தான் அதே சமயம் கதையும் முக்கியம். பிகிலின் விசில் சத்தம் இன்னும் அழுத்தமாக ஒலித்திருக்கலாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்