முகப்புவிமர்சனம்

குடும்பத்தோடு ரசிக்க வேண்டிய படம் ‘கோமாளி’

  | Friday, August 16, 2019

Rating:

குடும்பத்தோடு ரசிக்க வேண்டிய படம் ‘கோமாளி’
 • பிரிவுவகை:
  காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு
 • இயக்குனர்:
  பிரதீப் ரங்கநாதன்
 • தயாரிப்பாளர்:
  ஐசரி கணேஷ்
 • பாடல்கள்:
  ஹிப்பாப் தமிழா ஆதி

Comali Movie Review: ஆக்ஷன், சென்டிமெண்ட் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த ஜெயம் ரவிக்கு ‘கோமாளி’ திரைப்படம் காமெடி களத்தை அமைத்து கொடுத்திருக்கிறது. பள்ளி மாணவனாக இருக்கும் ஜெயம் ரவி, விபத்து ஒன்றில் சிக்கி கோமாவிற்கு செல்கிறார். சுமார் 16 ஆண்டுகள் கழித்து கண்விழுக்கிறார். கடந்த 16 ஆண்டுகளில் எற்பட்டிருக்கும் சமூக கலாச்சார மாற்றம், அறிவியல் மாற்றம், அரசியல் மாற்றம், தொழில்நுட்ப மாற்றங்களை கண்டு வியந்து போகிறார். தற்போதைய காலத்திற்க தன்னை பொருத்திக்கொள்ள போராடும் கதையே கோமாளி.

 

nm7j5vgo

 

1999 ஆம் ஆண்டு கோமாவில் விழுந்த ஜெயம் ரவி, நினைவு வந்து எழுந்து பார்த்தால் 2016! வாஜ்பேயி, ம.மோ.சிங், முடிந்து 2014 இல் மோடி ஆட்சி தொடங்குகிறது. இடைப்பட்ட ஆண்டுகளில், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற அரசியல் பொருளாதார மாற்றங்கள், பல இருந்தும் மனிதர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் இதையே வளர்ச்சி என்கிறோம். வானளவு உயர்ந்த கட்டிடங்கள், உலக மனிதர்களை நெருங்க வைக்கும் சமூக ஊடகங்கள், கார்ப்ரேட் வேலைவாய்ப்புகள், இத்தகைய வளர்ச்சி ஒரு புறம்!

21 ஆம் நூற்றாண்டிலும் மாறாத சாதிப் பிரிவினைகள், வன்முறை அரசியல், பால் சமத்துவமற்ற குடும்பப் பண்பாடு மறுபுறம்! இவற்றை கலகலவென உடைத்து, கதகளி ஆடுகிற ஜாலியான கேலி படமே கோமாளி!

 

nb8uqm2g

பள்ளி மாணவனாகவும், கோமாவில் இருந்து கண்விழித்த மற்றொரு பரிமாணத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தி போகிறார் ஜெயம் ரவி. சிறப்பான நடிப்பால் படத்தின் பாதி சுமையை கடைசி வரை சுமந்து சென்று பாராட்டை பெறுகிறார்.

90களில் பிறந்தவர்களை இப்படம் அதிகம் பாதிக்கும், பாதிக்கும் என்பதைவிட எதையெல்லாம் நாம் இழந்தோம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும். இப்படியாக ஒரு கதைகளத்தை உருவாக்கிய அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.

ஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் காஜல் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக முடித்து கொடுத்திருக்கிறார். அவருக்கு கதையில் இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. இரண்டாவது கதாநாயகியாக வரும் சம்யுக்தா அதிரடியாக ஸ்கோர் செய்து கவனம் பெறுகிறார்.

அரசியல் வாதியாக வரும் கே.எஸ். ரவிகுமார், படத்தின் கவனத்தை அதிகப்படுத்துகிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கவனிக்கத்தவகையில் அமைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். ஹிப்பாப் தமிழாவின் இசை கவனம் ஈர்க்கிறது.

இந்த படத்தில் சொல்லி இருப்பது போல் நம் எல்லோரிடமும் இத்தகையதொரு கோமா மனநிலை இருக்கிறது. நவீன உலகத்தில் கையில் ஆண்ட்ராய்ட் ஃபோனை வைத்துக்கொண்டே நாஸ்ட்டாலாஜியாவை விதந்தோதுகிற மனநிலை. கார்ப்ரேட் கம்பெனி வேலையும் வேண்டும். குடும்பத்தோடு மொட்டை மாடியில் அமர்ந்து நிலாச் சோறும் சாப்பிட வேண்டும். வளர்ச்சி எதையாவது ஒன்றை பலிகேட்டுக்கொண்டுதான் இருக்கும். குறிப்பாக வளர்ச்சியை காரணம் காட்டி 8 வழிச்சாலையில் விவசாயிகளின் நிலத்தை கேட்கவில்லையா!

 

cqan1q3

கோமாளியைத் தோண்டினால் நிறைய அரசியல் உண்டு. ரொம்ப சீரியஸான விஷயத்தை போகிற போக்கில் ஜாலியாக காட்டியிருக்கிறார்கள். வெகுஜன மக்களை எளிமையாக சென்றடைய இயக்குநர் சினிமா என்கிற மீடியத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. காமெடி களத்தில் சரியாக வேட்டை நடித்திக்கொண்டிருந்தவர் கதையை சிலைத் திருட்டுக்கு கொண்டு சென்றது திரைக்கதையை வேறு பாதைக்கு அழைந்துச் சென்றது. மற்றபடி குடும்பத்தோடு ரசிக்க வேண்டிய படம் கோமாளி!

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்