முகப்புவிமர்சனம்

பெண்ணுக்கு துணை வேண்டாம் தோழன் போதும் – டியர் காம்ரேட் விமர்சனம்!

  | Saturday, July 27, 2019

Rating:

பெண்ணுக்கு துணை வேண்டாம் தோழன் போதும் – டியர் காம்ரேட் விமர்சனம்!
 • பிரிவுவகை:
  ஆக்ஷன் லவ் டிராமா
 • நடிகர்கள்:
  விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா,
 • இயக்குனர்:
  பரத் கம்மா
 • தயாரிப்பாளர்:
  யாஷ் ராங்கினேனி
 • பாடல்கள்:
  ஜஸ்டின் பிரபாகரன்

இயக்கநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கும் படம் ‘டியர் காம்ரேட்’. பெண்ணுக்கு ஆண் துணையாக இருப்பதைவிட தோழனாக இருப்பதே சமூகத்தை செழுமைப்படுத்தும். இந்த படம் வலியுறுத்தும் ஆழமான பதிவும் இதுவே.

கல்லூரி மாணவர்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் புரட்சியாளராக வருகிறார் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. தங்களுடைய மாணவர் அமைப்பின் மூலம் கல்லூரி நிர்வாகத்தின் பிழைகளை சுட்டிக்காட்டி தீர்வுகளை பெற்று தருகிறார். சக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை தட்டி கேட்டு எம்.ஏ.வின் கோபத்திற்கு ஆளாகிறார் விஜய். அடிதடி, போராட்டம், கல்லூரி கலாட்டா, கலகலப்பு என நகர்கிறது இவரது அறிமுகம்.

ujcjld7o

ஒரு சிரிய விபத்தின் போது எதார்த்தமாக ராஷ்மிகா மந்தனாவை சந்திக்கிறார். அவர் தன்னுடைய பக்கத்து வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர் என்பதை பிறகு அறிந்துக்கொள்கிறார். பின் இருவரும் நண்பர்களாகிறார்கள். ராஷ்மிகாவுக்கு கிரிகெட் என்றால் உயிர், இந்திய அணியில் சேர்ந்து விளையாட வேண்டும் என்பது அவரது கனவு என்பதையும் விஜய் அறிகிறார். நண்பர்களாக இருக்கும் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். விஜய் தேவரகொண்டாவின் கோபமும், சண்டையும் ராஷ்மிகாவுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் போராட்டம், கோபம் எல்லாவற்றையும் அவர் விடச்சொல்கிறார். இருவருக்கும் ஏற்படும் வாக்குவாதத்தில் பிரிந்து விடுகின்றனர்.

காதலையும், காதலியையும் மறக்க மூன்றாண்டு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். இயற்கையின் இசையை ஆராய்ச்சி செய்வதில் கவனம் செலுத்துகிறார் விஜய். எதார்த்தமாக ராஷ்மிகாவின் அக்காவை சந்திக்கும் விஜய் ராஷ்மிகாவுக்கு விபத்து நடந்ததைப் பற்றியும் கிரிக்கெட்டை அவள் விட்டுவிட்டாள் என்பதையும் தெரிந்துக்கொள்கிறார்.

iekpdlrg

அதிர்ச்சி அடைந்த விஜய் ராஷ்மிகாவிற்கு என்ன நடந்தது, அவர் உயிராய் நேசித்த கிரிகெட்டை விட்டு ஏன் விலகினார். என்பதை கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஏற்பட்ட பிரச்னை என்ன? அதற்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பதுதான் மீதிக் கதை. கல்லூரி மாணவன், சூடு குறையாத புரட்சியாளன், காதலன், தோழன் என எல்லா இடங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி அதகளபடுத்தியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. கல்லூரியில் படிக்கும் போது இருக்கும் துணிச்சலான நடிப்பு, மூன்றாண்டுக்கு பிறகு இருக்கும் பொறுமை, பக்குவம் இரண்டிலும் சிறப்பான நடிப்பை வெயிபடுத்தியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

விளையாட்டு, குறும்பு, கேலி கிண்டல், தான் சந்திக்கும் பாலியல் பிரச்னை, பிரச்னைக்கு பின் ஏற்படும் மாற்றம் என எல்லா தளங்களிலும் தரமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ராஷமிகா மந்தனா. சீனியர் காம்ரேடாக சாருஹாசனின் நடிப்பு எதார்த்தம்.

vh57r9og

முதல் பாதி விஜய்தேவர கொண்டாவுடையது என்றால் இரண்டாம் பாதி ராஷ்மிகாவிற்கு ஒதுக்கி இருக்கிறார் இயக்குநர். தனக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல், தட்டிக்கேட்கவும் முடியாமல் தவிப்பில் இருக்கும் ராஷ்மிகா இரண்டாம் பாதியை தாங்கி பிடிக்கிறார். இப்படியான பிரச்னையில் ஒரு பெண்ணுக்கு துணையாக இருப்பதை விட தோஷனாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு அற்புதம். ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், சுஜித் சாரங்கனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

ஆண்கள் பெண்களுக்கு காவலாக இருக்க வேண்டாம், துணையாக இருக்க வேண்டாம் தோழனாக இருந்தால் அந்த பெண் எல்லாவற்றையும் சாதிக்கும் மனதைரியத்தை பெற்றுவிடுகிறாள் என்பதை அழகாகவும், யதார்த்தமாகவும் பேசியிருக்கிறது படம். காதல், பிரிவு, வலி, போராட்டம் என பேக்கேஜ் சினிமாவை படைத்திருக்கிறார் இயக்குநர் மொத்தத்தில் டியர் காம்ரேட் பார்க்கவேண்டிய படம்..

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்