முகப்புவிமர்சனம்

சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் கொரில்லா –- கொரில்லா விமர்சனம்!

  | Saturday, July 13, 2019

Rating:

சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் கொரில்லா –- கொரில்லா விமர்சனம்!
 • பிரிவுவகை:
  காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  ஜீவா,ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன்
 • இயக்குனர்:
  டான் சாண்டி
 • பாடல்கள்:
  சாம் சி.எஸ்

பணத்தேவைக்காக நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளை அடிக்கச்சென்று, அது விவசாய பிரச்னைகளின் தீர்வாக மாற்றும் கதைதான் கொரில்லா.

மாநகர போருந்துகளில் பயணிகளிடம் பணத்தை சுருட்டுவது, மருந்து கடையில் பகுதி நேர வேலை செய்து அங்கிருந்து மருந்துகளை திருடுவது, போலி மருத்துவராக இருப்பது என எளிதில் மாட்டிக்கொள்ளாத சிறிய சிறிய தவறுகளை செய்து பிழைக்கும் திறமையான இளைஞனாக வருகிறார் நடிகர் ஜீவா.

பொறியியல் பட்டதாரியான சதீஷ் ஆட்குறைப்பு காரணமாக தனியார் ஐடி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். சினிமாவில் நடிகனாக வேண்டும் என்கிற கனவோடு சென்னையில் முகாமிட்டு முயற்சி செய்கிறார் விவேக் பிரன்னா.

மழை இல்லாமல் விளைச்சல் பொய்த்து போக வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சிக்கும் மதன் நண்பனின் அறிவுரையின் படி சென்னைக்கு வருகிறார். இவர்களின் நான்கு பேரையும் ஒன்றாக இணைக்கிறது பணப்பிரச்னை. வழியேதும் இல்லாமல் வங்கியில் கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார்கள்.

jgngqtt8

ஹாலிவுட் படங்களைப்பார்த்த அனுபவத்தை வைத்து திட்டத்தை முயற்சி செய்து பார்க்கிறார்கள். அது சொதப்பலில் முடிய மனம் தளராமல் நம்பிக்கையோடு வங்கி ஒன்றை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார்கள். அதற்குள் காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைக்கிறார்கள். வங்கியில் இருக்கும் மக்களை பிணைக்கைதிகளாக்கி நாள்வரும் அரசாங்கத்திடம் வைத்த கோரிக்கைகள் என்ன? அவர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேறியதா? காவல்துறையின் பிடியில் சிக்காமல் அவர்கள் பாதுகாப்பாக மீண்டனரா என்பது போன்ற கேள்விகளோடு, ஷாலினி பாண்டே மற்றும் பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிம்பன்சி குரங்கு, யோகி பாபு, மொட்டை ராஜ்ந்திரன் ஆகியோரின் பங்களிப்பு என்ன ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது திரைக்கதை.

விவசாயப் பிரச்னை, நீட், இந்தி திணிப்பு உட்பட சமீப கால அரசியலை விமர்சிக்கும் திரைப்படங்கள் சமீப நாட்களாக அதிகம் வெளியாகி வருகிறது. சினிமா வெறும் பொழுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை வெகுஜனமக்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாக சினிமா மாறியிருப்பதில் மகிழ்ச்சி. யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டிய கருத்துகளை நகைச்சுவையாக எளிமையாக மக்களிடம் கடத்தி செல்லும் பணியை படைப்பாளிகள் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் கொரில்லா திரைப்படம் விவசாயிகளின் ஒரு பிரச்னைக்கு தீர்வு கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறது.

திரைப்படம் தொடங்கிய முதல் நகைச்சுவை களம் அமைத்து இறுதியில் விவசாயிகளுக்கான தீர்வை ஆழமாகவும் அழகாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி.

779l77no

நீண்ட நாட்களுக்கு பிறகு உற்சாகமான ஜீவாவை பார்க்க முடிந்தது. இதன் பிறகு கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஜீவாவை பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறார். சிம்பன்சி குரங்கிடையே ஏற்படும் அன்பும், ஷாலினி பாண்டேவுடனான காதலிலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். நண்பர்களோடு இவர் செய்யும் சேட்டையும், விவசாயிகளுக்காக தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பு குணமும் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டேவிற்கு திரைக்கதையில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் வந்து செல்லும் இடங்களில் எல்லாம் கவனம் ஈர்க்கிறார். ஜீவாவுடனான காதல், ஊடல் , கூடலில் மிகை இல்லாத நடிப்பில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை முடித்து கொடுத்திருக்கிறார்.

சில படங்களில் சதீஷின் காமெடி சலிப்பை ஏற்படுத்தும் படியாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் இவருக்கு அமைந்திருக்கும் கூட்டணி பக்காவாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. இடைவெளிக்கு பிறகு காட்சிகள் குறைவு என்றாலும் யோகி பாபுவின் வருகைக்கு பிறகு நகைச்சுவை திகட்டாத தீணியாகிறது. மொட்டை ராஜேந்திரனுக்கு ஒரு சில காட்சிகள் என்றாலும் வந்து செல்லும் இடங்களில் எல்லாம் கவனம் ஈர்க்கிறார்.

gll4gp5o

சாம்.சி.எஸ் ஸின் இசையும், குருதேவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்திருக்கிறது. ரூபனின் எடிட்டிங் நேர்த்தி.

நாட்டின் பெரும் பிரச்னை விவசாயப்பிரச்னை என்பதை உணர்ந்து இருக்கிறார் இயக்குநர். அதை மைய்யப்படுத்தி மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வலுவான கதைகளத்தை அமைத்து விவசாய பிரச்னையை பேசும் படங்கள் வந்த போதிலும், அலட்டிக்கொல்லாமல் எளிமையான சினிமா தோணியை கையில் எடுத்திருக்கிறார்.

விளம்பரங்கள், பர்ஸ்ட் லுக் என அனைத்திலும் சிம்பன்சி குரங்கு இடம் பெற்றதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு முக்கியத்துவம் கொடுக்கும் கூடுதல் காட்சிகள் வைத்திருக்களாமோ என்று தோன்றியது. இவற்றை தவிர்த்து பார்க்கும் போது கொரில்லா சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்