முகப்புவிமர்சனம்

நகைச்சுவை சாம்ராஜ்யம் “கூர்கா” -– திரை விமர்சனம்!

  | Saturday, July 13, 2019

Rating:

நகைச்சுவை சாம்ராஜ்யம் “கூர்கா” -– திரை விமர்சனம்!
 • பிரிவுவகை:
  காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  யோகி பாபு, சார்லி, எலிசா, லிவிங்ஸ்டன்,
 • இயக்குனர்:
  சாம் ஆண்டன்
 • பாடல்கள்:
  ராஜ் ஆர்யன்

நகைச்சுவை களத்தை கையில் எடுத்து ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘100’, ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் நான்காவதாக இயக்கி இருக்கும் படம் ‘கூர்கா’. யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க நகைசுவை சாம்ராஜயத்தை அமைத்திருக்கிறது.சௌத் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயரும் “கூர்கா” சமூகத்தை சேர்ந்த ஒருவர் சௌத் மெட்ராஸ் பெண்னை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இப்படி இனக்கலப்பு குடும்பத்தின் வாரிசாக வருகிறார் யோகி பாபு.சிறுவயத்தில் இருந்தே காவல்துறையில் சேர வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் முயற்சி செய்து தோல்வி அடைகிறார். வேறு வேலை எதுவும் இல்லாததால் ஒரு வீட்டிற்கு செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்கிறார். அந்த வீட்டிற்கு அருகில் அமெரிக்க தூதரக அதிகாரி எலிசா வசித்து வருகிறார். அவரை பார்த்து காதலில் விழுகிறார்.

pslqkf6o

திடீரென யோகி பாபு ஒரு பெரிய வனிக வளாகத்திற்கு மாற்றப்படுகிறார். அந்த வனிக வளாகத்தை தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து மக்களை பினைக்கைதிகளாக்கி பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.அனைத்து செக்யூரிட்டிகளும் வெளியேற்றப்பட்ட நிலையில், சார்லியும், யோகி பாபு இருவர் மட்டும் தீவிரவாதிகளின் கண்களில் படாமல் வளாகத்திற்குள்ளே இருக்கிறார்கள்.காவல்துறையினர் உள்ளே செல்ல முடியாத சூழலில் யோகி பாபு தீவரவாதிகளின் திட்டத்தை முறியடித்து மக்களை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

5mcmpsi

முழுக்க முழுக்க காமெடியை மட்டும் ஆயுதமாகக் கொண்டு களம் இறங்கி இருக்கும் சாம் ஆண்டன், “கூர்கா” வில் நகைச்சுவையை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக்கொடுத்திருக்கிறார்.


திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்தாலே கவனம் ஈர்த்து முத்திரை பதிக்கும் யோகி பாபு இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று அதகளப்படுத்தியிருக்கிறார். எப்போதும் போல் அவரின் எதார்த்த நடிப்பு இயல்பாகவே சிரிப்பை வர வைக்கிறது. கதாநாயகனுக்கென்றே மாஸ் கதாபாத்திரத்தை உருவாக்கி ரசிக்க வைக்கும் சினிமா தோணியை மாற்றி இயல்பான மனிதரை ஹீரோவாக்கி இருக்கிறார் சாம் ஆண்டன். சார்லியின் அனுபவ நடிப்பு யோகி பாபுவிற்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறது. எழுதப்பட்ட வசனமாக இல்லாமல் இயல்பான வார்த்தைகளாக உதிர்க்கிறார். அதற்கு பெரிதும் உதவி செய்கிறது அவரது உடல் மொழி. பலமான பின்னணி இசையும், பிரம்மாண்ட சண்டை காட்சி என கதாநாகனுக்கென்று பன்பாட்டை அமைத்து ரசித்து வருகிறவர்களுக்கு யோகிபாபுவை கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள தயக்கும் இருக்கத்தான் செய்யும் அதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் உங்கள் களத்தை உங்களுக்கானதாக அமைத்துக்கொள்ளுங்கள் யோகி பாபு வாழ்த்துகள்.காவல்துறை அதிகாரிகளாக வரும் ரவி மரியா, நரேன், ஆனந்த் ராஜ் ஆகியோர் கவனம் பெறுகிறார்கள். படத்தில் இடம் பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

26cov15


போலி சாமியார், முட்டால் முதல்வர், உதவாக்கரை அமைச்சர்கள், வாய்கொழுப்பு அரசியல்வாதி, டிஆர்பி பித்து பிடித்த சிஇஓ என சமகால நிகழ்வுகளை எல்லாம் நினைவு படுத்தும் காட்சிகளில் சிரிக்கமால் இருக்க முடியவில்லை. சினிமாவில் இருந்து, அரசியல்வரை ஒரு வட்டம் அடித்து காட்சிக்கு காட்சி சிரிப்பு மழையில் நனைக்கிறார்.எலிசாவின் நடிப்பு நேர்த்தி, பாடல்கள் பெரிதாய் கை கொடுக்கவில்லை என்றாலும் ராஜ் ஆர்யனின் பின்னணி இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. படத்தில் கூர்கா சமூகத்தைப்பற்றியும் ஒரு செய்தி நமக்கு இருக்கிறது.

v8b4fif8

சில இடங்களில் யோகி பாபு தடுமாறுவதாக தோன்றினாலும் அடுத்த காட்சியே அதை சமாலித்து ஸ்கோர் செய்கிறார். சின்ன சின்ன விஷயங்களை கடந்து பார்க்கும் போது “கூர்கா” நகைச்சுவை சாம்ராஜ்யத்தையே அமைத்திருக்கிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்