முகப்புவிமர்சனம்

ஜாலியான கலாட்டா “ஜாக்பாட்” விமர்சனம்

  | Friday, August 02, 2019

Rating:

ஜாலியான கலாட்டா “ஜாக்பாட்” விமர்சனம்
 • பிரிவுவகை:
  காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  ஜோதிகா, ரேவதி, யோகி பாபு,
 • இயக்குனர்:
  கல்யாண்
 • தயாரிப்பாளர்:
  சூர்யா
 • பாடல்கள்:
  விஷால் சந்திரசேகரின்

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளபடம் “ஜேக்பாட்”. காமெடி களத்தை முதலீடாகக் கொண்டு கல்யாண் இயக்கி இருக்கும் இப்படம் போதுமான அளவிற்கு காமெடியை கொடுத்திருக்கிறது.

1980 களில் ஒரு கிமாத்தில் இருக்கும் விவசாயி ஒருவர் கிணறு தோண்டும் போது அது அதிசய பாத்திரத்தை கண்டெடுக்கிறார். அதில் எதைப்போட்டாளும் அந்த பொருள் வந்துக்கொண்டே இருக்கும். அந்த விவசாயி சில மாதங்களில் அதைப்பயன்படுத்தி பணக்காரர் ஆகிறார்.

சில ஆண்டுகள் கழித்து அந்த பாத்திரத்தை திருடர்கள் சிலர் திருடிச்சென்று ஒரு ஆற்றில் வீசி விடுகிறார்கள். இந்த பாத்திரம் பல ஆண்டுகள் கழித்து ஒரு இட்லி விற்கும் மூதாட்டியிடம்  கிடைக்கிறது. அதைப்பயன்படுத்தி பணம் எடுத்து சீரியல் நண்பர் எல்லாம் ஒன்றாக இருக்கிறது என அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு சிறுசிறு ஏமாற்று வேலை செய்து சிறைக்குள் வரும் ஜோதிகா மற்றும் ரேவதியிடம் அந்த பாத்திரத்தைப் பற்றி கூறுகிறார் அந்த மூதாட்டி.  அந்த பாத்திரம் வில்லன் ஆனந்த் ராஜ் வீட்டிள் உள்ள முரட்டு காளைமாடு அருகில் இருப்பதை அறிந்துக்கொள்கிறார்கள். அதை அவர்கள் எடுத்தார்களா இல்லையா? இவர்களின் கதையில் யோகி பாபு, ஜெகன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

 

uo6antpg

ஆக்ஷன் கலந்த ஒரு நேர்தியான காமெடி கதைகளத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர். இந்த களத்தில் இயக்குநர் சொல்லிக்கொடுத்தது போலவே விளையாடி கவனம் பெறுகிறார்கள் ஜோவும், ரேவதியும். சில இடங்களில் ஜோதிகாவின் நடிப்பு மிகைப்படுத்தப்பட்டது போல் இருந்தது. ஆக்ஷன் காட்சிகளில் அட்டகாசம் செய்திருப்பது விஜய்சாந்தியை கண்முன் நிறுத்தியது போல் இருந்தது.  ரேவதியின் அனுபவ நடிப்பு நேர்த்தி.

யோகி பாபுவின் நடிப்பு எப்போதும் போல் இயல்பாக வந்து சிரிக்க வைக்கிறார். அதே நேரத்தில் மக்களை சிரிக்க வைக்க தன் உடலை தானே கேளி செய்யும் சித்தரிப்புக்கு கொண்டுவந்தது பெரும் வருத்தம். கண்டனத்துக்குறியதும் கூட.

 

jtj44sc8

கூட்டாளியாக வரும் மொட்டை ராஜேந்திரன் கொடுக்கப்பட்ட வேலையை கனக்கச்சிதமாக முடித்துக்கொடுத்திருக்கிறார். இவரைத்தவிற மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் நிறைவாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பை கவனித்த விஜய் வேலுகுட்டி சில இடங்களை கத்தரி போட்டு தூக்கி இருக்கலாம் என்று தோன்றியது. ஆர்.எஸ். ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

இயக்கநர் திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் என்று சில இடங்களில் தோன்றியது. நேரத்தை குறைத்திருக்களாம். சிரிப்பே வராத சில கதாமெடிகளை தூக்கி இருக்கலாம் இதைத் தவிர்த்து பார்க்கும் போது ஒரு ஜாலியான கலாட்டாவை ஜோவும், ரேவதியும் இப்படத்தில் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்