முகப்புவிமர்சனம்

“எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்” கடாரம் கொண்டான் விமர்சனம்!

  | Friday, July 19, 2019

Rating:

“எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்” கடாரம் கொண்டான் விமர்சனம்!
 • பிரிவுவகை:
  ஆக்ஷ்ன் திரில்லர்
 • நடிகர்கள்:
  விக்ரம், அபி ஹாசன், அக்ஷரஹாசன்,
 • இயக்குனர்:
  ராஜேஷ் எம் செல்வா
 • தயாரிப்பாளர்:
  கமல்ஹாசன்
 • பாடல்கள்:
  ஜிப்ரான்

 காலைப்பனி, தூங்கா வனம் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. நடிகர் விக்ரம், நாசர் மகன் அபி ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இப்படம்  ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படமாக அமைந்திருக்கிறது.
 
வெளிநாட்டில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான கேகே(விக்ரம்) கிரைம் பிரான்ச் போலீஸ் குழுவால் துரத்தப்படுகிறார். அதில் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்க்கும் அபியின் மனைவியை கடத்தி வைத்துக்கொண்டு கேகேவின் தம்பி கேகே வை வெளியில் கொண்டுவரச்சொல்கிறான்.

 
vm1skjgo

இதனிடையே அந்த ஊரில் நடந்த முக்கிய கொலை ஒன்று காவல்துறைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அந்த கொலையை கண்டுபிடிக்க ஒரு குழுவை அமைக்கிறது காவல்துறை. யார் அந்த கொலையை செய்தது. அபியின் மனைவி அக்ஷரா ஹாசன் காப்பாற்றப்பட்டாரா கொலைக்காரனின் ஆதாரம் என்னவானது? கேகே யார் போன்ற கேள்விகளுக்கு விடைசொல்கிறது. ‘கடாரம் கொண்டான்’ படத்தின் திரைக்கதை.   ஹாலிவுட் ஸ்டைலில் விக்ரம் ஜொலிக்க அதற்கேற்ற வலுவான திரைக்கதை அமையாதது வருத்தம்தான். விக்ரமின் மிரட்டும் உடம்பிற்காகவாவது அட்டகாசமான சண்டை காட்சிகள் வைத்திருக்கலாம். 

இந்த படத்தின் வில்லனை தேர்வு செய்வதிலும் சிக்கலாகவே தெரிகிறது. ஒரு வேலை வில்லனுக்கும் கனமான கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் ஸ்டைலாக தனது வேலையை முடித்துக்கொடுத்திருக்கிறார் விக்ரம். சிறந்த கலைஞரான விக்ரமை இன்னும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கலாம். நாசரின் மகன் அபிஹாசனும், கமலின் மகள் அக்ஷரா ஹாசனும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக கவனம் பெருகிறார்கள். 

ri1vpdsg

இருவரும் யதார்த்தமான நடிப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். காதல், ஊடல், கூடல் என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட களத்தை கோடுதாண்டாமல் முடித்துக்கொடுத்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகளாக வரும் லீனா குமார், புரவலன், சித்தார்தா போன்றோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துகொடுத்திருக்கிறார்கள். வில்லனாக வரும் விகாஸ் ஸ்ரீவட்சவ் படத்தில் தனக்கான இடத்தை மிகையில்லாமல் நடித்துகொடுத்திருக்கிறார். இயக்குநர் அவர் மீது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜிப்ரான் இசையும், பிரவீன் ஆர்.குப்தாவின் பிரம்மாண்ட ஒளிப்பதிவும் ஹாலிவுட் படங்களை நினைவு படுத்துகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. 

ரேசிங், சேசிங் போன்ற காட்சிகள் பிரமாதமாக அமைந்துள்ளது. ஆனால் திரைக்கதைக்கு வலு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் முதல் பாதி வரை படத்தின் கரு என்னவென்றே தெரியாமல் கடக்கிறது. இரண்டாம் பாதியில் இருந்து ஒரு புரிதலுக்கு வருகிறது படம். அந்த புரிதலும் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் காட்சி அமைப்பும், படத்தின் ஸ்டைலும் நமக்கு விருந்து கொடுத்தாலும் திரைக்கதையில் பலம் இல்லாததால் படம் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்