முகப்புவிமர்சனம்

அரைத்த மாவையே நவீன இயந்திரத்தில் அரைத்திருக்கிறது ‘குருஷேத்ரா’

  | Friday, August 16, 2019

Rating:

அரைத்த மாவையே நவீன இயந்திரத்தில் அரைத்திருக்கிறது ‘குருஷேத்ரா’
 • பிரிவுவகை:
  epic historical war
 • நடிகர்கள்:
  தர்ஷன், அர்ஜுன்,ஸ்னேகா
 • இயக்குனர்:
  நாகன்னா
 • பாடல்கள்:
  வி. ஹரிகிருஷ்ணா

கன்னட இயக்குநர் நாகன்னா இயக்கத்தில் 75 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமாக செட் அமைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘குருஷோத்ரா’. இப்படம் தமிழ், தெலுங்க, கன்னடம், ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கிக்கிறது. இப்படம் வரலாற்று புனைவு கதையான மகாபாரத போரில் கௌரவர், பாண்வர்களுக்கு இடையே நடைபெற்ற போரில் துரியோதனுக்கும், கர்ணனுக்கும் இடையேயான நட்பை மைய்யக்கருத்தாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே வாய்மொழியாகவும், நாடகங்கள் வாயிலாகவும், கதைகளாகவும் பல முறை கேட்டு தெளிந்த கதை அம்சம் என்பதால் அனைவருக்கும் இப்படம் பறிச்சயமாக இருக்கும். இப்படம் பேசும் முக்கிய விஷயங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

கௌரவ வம்சத்தை சேர்ந்த துரியோதனன்(தர்ஷன்), கர்ணனாக (அர்ஜுன்) திரௌபதியாக (ஸ்னோகா), கிருஷ்ணனாக( ரவிசந்திரன்), பீஷ்மனாக (அம்ரிஷ்) அர்ஜுனனாக(சோனு சூது) ஆகியோர் நடித்துள்ளனர்.

9fen2mv

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே வீர விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் கௌரவர் குல தலைவனாக துரியோதனன் போட்டியிடுகிறான். பாண்டவர் அணியில் இருந்து பீமன் மோதுகிறான். அடுத்து வில் வித்தையில் அர்ஜுன் பாண்டவர் அணியின் சார்பாக போட்யிடுகிறான். அர்ஜுனனுக்கு இணையாக யாரும் இல்லையா என துரோனாச்சாரியார் முழங்க அங்கே கர்ணன் நான் இருக்கிறேன் என்று மக்க கூட்டத்தில் இருந்து வெளியே வருகிறான். பின் நீ யார். உன் குலம் என்ன இது சத்திரியர்கள் போட்டியிடும் களம் தேரோட்டியின் மகனான உனக்கு இங்கு இடமில்லை என்று கடிந்துக்கொள்கிறார்கள் கௌரவர்கள். இங்கிருந்தே தொடங்கி விடுகிறது மகாபாரதம் கற்பிக்கும் சாதிய முரண். இந்த முரண் படத்தின் இறுதிவரை எங்கெங்கெல்லாம் மனிதனை மனிதன் பிரித்தாள முடியும், புறம் தள்ள முடியும் என்பதை விவரிக்கிறது படம்.

பாண்டவர்களால் புறக்கணிக்கப்படும் கர்ணனை, அவனின் வீரம் அறிந்த அரவனைத்துக்கொள்கிறான் துரியோதனன். அந்த காட்சியில் மகாபாரத்தின் கதாநாயகனா தோன்றுகிறான் துரியோதனன். சபையோர் நிறைந்த அவையில் தன் மானம் காத்த துரியோதனுக்காக தன் உயிரையும் தியாகம் செய்வேன் என்று சூலுரைக்கிறான் கர்ணன்.

ராஜ வம்சத்தை நிர்மூலமாக்க வஞ்சகத்தை பல ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்து பாதாள சிறையில் இருந்து வெளியேறும் சகுனியின் சித்து விளையாட்டில் மகாபாரத போர் தொடங்குகிறது. பாண்டவர்கள் ஐவரும் பொருமை காத்தாலும் பல இடங்களில் வில்லன்களாவே தோன்றுகிறார்கள். துரியோதனன் ஏமாந்த கீழே விழுந்ததை கண்டு நகைகும் திரௌபதியை பழி தீர்க்க நினைப்பதும், அதற்காக ஒரு பெண்ணிடம் மானபங்க படுத்த நினைக்கும் வஞ்சகத்தன்மையைத் தவிற மற்ற எல்லா இடங்களிலும் படன் நாயகனாகவே தோன்றுகிறான் துரியோதனன்.

aurnjigg
 

மனதர்களிடையே ஆழப்பதிந்திருக்கும் சாதிய வேற்றுமைகளும் அதற்காக கற்பிக்கப்படும் நியாயங்களையும் மீண்டும் மீண்டும் இது போன்ற படங்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை இன்னும் மக்களின் மனதில் ஆழப்பதிய உரம் போடகிறது என்றாலும் திறமையும், நட்பும் சாதியை உடைக்கும் கருவி என இனனொரு கற்பிதத்தையும் இப்படம் பேசுகிறது.

தொழில்நுட்ப வசதியுடன் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படததில் கிராபிக்ஃஸ் காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன. மகாபாரத போர் களங்களை காட்சி படுத்திய விதத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இது போன்ற பிரம்மாண்ட செலவில் வெளியாகும் படங்களுக்கு எப்போதும் ஒரு பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தும் அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் இல்லை.

4d222e8

கிருஷ்ணனைப் பற்றி பேசப்படும் கற்பிதங்களை எல்லாம் உடைத்தெறிகிறது இப்படம். தன் குருநாதர், தாத்தா, சொந்தம் பந்தங்களை எதிர்த்து என்னால் போரிட முடியாது என கூறும் அர்ஜுனனை மூலைச்சலவை செய்து போர் செய்ய தூண்டும் கிருஷ்ணனின் கதாபாத்திரம் அபத்தம். இது போன்ற பல அபத்தங்களை கிருஷ்ணனிடம் பார்க்க முடிகிறது. இன்றைய அரசியலோடு தொடர்பு படுத்தி பார்க்கும் போது இப்படத்தில் வில்லன் கிருஷ்ணன்தான்.

திரௌபதியாக நடித்திருக்கும் ஸ்நேகா தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி கவனம் பெறுகிறார். கர்ணனாக நடித்திருக்கும் அர்ஜுன் படத்தின் இன்னொரு நாயகன் என்பதால் அதன் சித்தரிப்பு கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக முடித்து பாராட்டுகளை பெறுகிறார். இயக்குநர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம், தொழில்நுட்பங்களிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. பின்னணி இசை, படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. மொத்ததத்தில் அரைத்த மாவையே நவீன இயந்திரத்தில் அரைத்திருக்கிறது ‘குருஷோத்ரா’.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்