முகப்புவிமர்சனம்

காமெடியான காதல் கதை -‘லவ் ஆக்ஷன் டிராமா’ விமர்சனம்

  | Tuesday, September 10, 2019

Rating:

காமெடியான காதல் கதை -‘லவ் ஆக்ஷன் டிராமா’ விமர்சனம்
 • நடிகர்கள்:
  நிவின் பாலி, நயன்தாரா,
 • இயக்குனர்:
  தியான் ஸ்ரீனிவாசன்
 • தயாரிப்பாளர்:
  விஷாகா சுப்புரமணியம்
 • பாடல்கள்:
  ஷான் ரஹ்மான்

நிவின்பாலி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் படம் ‘லவ் ஆக்ஷன் டிராமா’. சென்னை கேரளா என்று இரண்டு ஊர்களிலும் கேமிராவை திருப்பி, தமிழ் மலையாளம் என இரண்டு மொழியையும் கலந்து ஒரு கலகலப்பான விருந்தை சமைத்திருக்கிறார் இயக்குநர் தியான் ஸ்ரீனிவாசன்.
 
சென்னையில் வேலைபார்க்கும் நயன்தாரா தோழியின் திருமணத்திற்காக கேரளாவிற்கு செல்கிறார். அந்த திருணமத்தில் நிவின் பாலியை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. ஆனால் ஒருவரை ஒருவர் தங்களுடைய காதலை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.
 
திருமணம் முடிந்தவுடன் நயன்தாரா சென்னைக்கு செல்கிறார். அவரை காண நிவின் பாலியும் சென்னைக்கு வருகிறார். அங்கு அவர் தன்னுடைய காதலை சொல்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். நயன்தாராவுடன் எப்போது இருக்கும் அவருடைய நண்பர்கள் குழுவிற்கு நயன்தாராவே தலைவியாக இருக்கிறார். இதனால் தோழிகளின் கணவர்கள் நயன்தாராவை பழிவாங்க சில சூழ்ச்சிகளை செய்கிறார்கள்.
 
திருமணம் வரை சென்று நிவின்பாலி நயன்தாரா கல்யாணம் தடை ஆகிறது. இந்த பிரச்னைகளை எதிர்த்து நிவின்பாலி நயன்தாராவை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை!
 
 மிக எளிமையான ஒரு காதல் கதையை காமெடி கலந்து எதார்த்த சினிமாவை கொடுத்திருக்கிறார் தியான் ஸ்ரீனிவாசன். காதலை விட காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். எந்த இடத்திலும் சேர்வு தட்டாமல் படத்தோடு பயணிக்க வைக்கிறது கதைக்களம். இதிலே இயக்குநர் வெற்றி பெற்று விடுகிறார்.
 
நிவின்பாலி எப்போதும் போல ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கிறார். வெகுளித்தனமும் எதார்த்த நடிப்பாலும் ரசிக்க வைக்கிறார்.  காமெடி காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். ஷோபாவாக நடித்திருக்கும் நயன்தாரா எப்போதும் போல் தனது மிடுக்கான நடிப்பில் அசத்தி இருக்கிறார். காதல் ஊடல், கூடல், வெட்கம் என தனக்கு கொடுக்கப்பட்ட எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
 
படத்தை கலகலவென கொண்டு செல்ல அஜு வர்கீஸின் பங்கு அலப்பரியது. நிவின் பாலியின் நண்பனாக படம் முழுதும் பயணிக்கு அஜு எதார்த்த நடிப்பில் அரங்கையே சிரிக்க வைத்து மகிழ்விக்கிறார்.
 
மற்ற நடிகர்கள் அனைவரும் தேவையானவற்றை கொடுத்து கைதட்டல்களை பெறுகிறார்கள். எந்த கதாபாத்திரமும் தேவை இல்லை என்கிற கண்னோட்டம் எழுந்திடாதவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
 
தேவையானவற்றை கோர்த்து படத்தொகுப்பை சிறப்பாக செய்திருக்கிறார் விவேக் ஹர்ஷன். ஷான் ரஹ்மான் இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னனி இசையும் ஜோமன் டி. ஜான் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில் படம் நல்ல காதல் டிராமாதான்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com