முகப்புவிமர்சனம்

“மெய் பொருள் காண்பது அறிவு” - “மெய்” விமர்சனம்

  | Saturday, August 24, 2019

Rating:

“மெய் பொருள் காண்பது அறிவு” - “மெய்” விமர்சனம்
 • நடிகர்கள்:
  நிக்கி சுந்தரம், ஐஷ்வர்யா ராஜேஷ்
 • இயக்குனர்:
  எஸ்.ஏ.பாஸ்கரன்
 • தயாரிப்பாளர்:
  சுந்தரம் புரடெக்ஷ்ன்
 • பாடல்கள்:
  அனில் பிரத்வி குமார்

தமிழ்நாடு உள்ளிட்ட உலக நாடுகளை கூட அச்சுறுத்தம் உடல் உறுப்பு திருட்டில் ஈடுபடும் மாஃபியா கும்பல் எப்படி செயல்படுகிறது என்பதை விவரிக்கும் படம் ‘மெய்’.

அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு சில காரணங்களால் பயிற்சியை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் சென்னையில் உள்ள மாமா வீட்டுக்கு வருகிறார் கதாநாயகன் (நிக்கி சுந்தரம்). ஒரு மெடிக்கள் கம்பெணியில் வேலை பார்க்கும் பெண்ணாக இருக்கும் நாயகி (ஐஷ்வர்யா ராஜேஷ்) அனைவருக்கும் உதவும் பனப்பான்மை உள்ள பெண்ணாக இருக்கிறார்.

சாலையில் மயங்கி விழுந்து அடிப்பட்டிருக்கும் சார்லியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி கேட்க நாயகனும் உதவுகிறார். இந்த பிரச்னையால் அலுவலகத்தில் சில பிரச்னைகள் ஏற்படுகிறது அதற்காக மீண்டும் நாயகி நாயகனை அனுகுகிறார். இவர்களின் சந்திப்பு நட்பாக மாறி காதலிக்கத் தொடங்குகிறார்கள்.

hhrla38o

இதற்கிடையில் சென்னையில் பல இடங்களில் பெண்கள், குழந்தைகள் இளைஞர்கள் பலர் காணாமல் போகிறார்கள். சிலர் ஒரே மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். காணாமல் போனவர்களில் சார்லியின் மகளும் ஒருவர். சார்லியின் கதை கேட்டறிந்த நாயகி அவரை கண்டுபிடிக்கச்சொல்லி போராட்டம் நடத்துகிறார். இந்த பிரச்னை காவல்துறையினருக்கு நெருக்கடியை கொடுகிறது.

இந்த வழக்கு காவல்துறை ஆய்வாளராக இருக்கும் கிஷோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணையில் மர்மமான முறையில் இறந்தவர்கள், காணாமல் போனவர்களின் கொல்லப்பட்டு உடல் உறுப்புகள் திருடப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிகிறார். அமெரிக்காவில் இருந்து வரும் நாயகன் மாமாவின் மெடிக்கல் ஷாப்பில் வேலைபார்க்கிறார். அங்கு தங்கதுரையும், டார்லிங் மதன் இரவரும் நண்பர்களாகிறார்கள். மதனுக்கு வலிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவர் தவறான சிகிச்சையால் இறந்து விடுகிறார். இவருடைய மரணம் இயற்கையானது இல்லை என்பதை நாயகன் கண்டு பிடிக்கிறார். மதனுடைய உடல் உறுப்பு திருடப்பட்டிருக்கிறது என்பதையும் நாயகன் அறிந்துக்கொள்கிறார்.

நாயகனும், ஆய்வாளராக இருக்கும் கிஷோரும் உடல் உறுப்பை திருடும் மாஃபியா கும்பலை கண்டு பிடித்தனரா அவர்களுக்கு தண்டனை பெற்று தந்தனரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சென்னை மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இலவச முழுஉடல் பரிசோதனை என்ற பெயரில் இலவச கேம்ப் தனியார் மருந்து நிறுவனங்களாலும், தனியார் மருத்துவமனைகளின் பெயரிலும் நடத்தப்படுகிறது. இதில் பெரும்பாலும் தங்களது உடல் நிலைகுறித்து அறிந்துக்கொள்ளும் மக்கள் ஏழை எளிய மக்களாக இருக்கிறார். இவர்களின் இரத்தம் எந்த வகையை சேர்ந்தது. இவர்களின் முகவரி என்ன போன்ற பல்வேறு விபரங்களை சேகரிக்கும் அவர்கள் அதை வைத்து என்ன செக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைக்களம்தான் இந்த படம்.

48goiji8

வலுவான கதைகளத்தை கையில் எடுத்த இயக்குநர் கதாபாத்திரங்கள் தேர்வில் சற்று சொதப்பி இருக்கிறார். இது போன்ற கதைஅம்சம் கொண்ட படங்கல் தமிழ்சினிமாவிற்கு ஏற்கனவே பரிச்சயம் ஆனவைதான். உதாரணத்திற்கு ‘Mr.ரோமியோ’, ஆனாலும் வளர்ந்துள்ள நாகரீக சமூதாயத்தில் மீண்டும் இதுபோன்ற கதைகளுக்கு புத்துணர்ச்சி கொடுப்பது அவசியமே அதற்கு இயக்குநரை பாரட்டலாம். ஆனால் கதைக்களத்தை இன்னும் வலுவாகவும், கதாபாத்திரங்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமே என்று தோன்றியது.

நாயகனாக நடித்திருக்கும் நிக்கி சுந்தரத்திற்கு இன்னும் பயிற்சி அளித்திருக்க வேண்டும். நடிக்க முற்பட்டு முற்பட்டு மிகவும் சிறமப்படுகிறார் நாயகன்.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துக்கொடுத்திருக்கிறார். இன்னும் அவர் கவனத்தோடு கதைகளங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.

ern5ruh8

சில மணிநேரமே வரும் தங்கதுரையும், மதனும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளனர். மதன் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நின்று விடுகிறார்.

ஆய்வாளராக நடித்திருக்கும் கிஷோர் அவருக்கேயுரிய மிடுக்கான நடிப்பில் கவனம் பெறுகிறார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெய் பொருள் காண்பது அறிது என்பதை உணர்த்துகிறது ‘மெய்’.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்