முகப்புவிமர்சனம்

குழந்தைகளோடு கொண்டாட வேண்டிய படம் ; "மான்ஸ்டர்" விமர்சனம்

  | Friday, May 17, 2019

Rating:

குழந்தைகளோடு கொண்டாட வேண்டிய படம் ;
 • பிரிவுவகை:
  காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்
 • இயக்குனர்:
  நெல்சன் வெங்கடேசன்
 • தயாரிப்பாளர்:
  எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் "மான்ஸ்டர்". புதுவீட்டிற்கு குடி போகும் கதாநாயகன், அவருக்கு பின் அந்த வீட்டில் குடியேறும் சிறிய எலி ஒன்றால் என்னமாதிரியான நன்மைகள், தீமைகளை அவர் எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

சிறுவயதில் இருந்தே எந்த ஜீவராசிகளையும் கொல்லக்கூடாது என்கிற சாதுவான ஆன்மீகவாதியாக வளர்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சென்னையில் அரசுபணியில் இருக்கும் அவருக்கு தஞ்சாவூரில் எளிமையான குடும்பம் ஒன்றும் இருக்கிறது.

எஸ்.ஜே. சூர்யாவிற்கு பல இடங்களில் பெண் பார்த்தும் எந்த இடத்திலும் அவருக்கு பெண் அமையவில்லை. தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் இவருக்கு பெண் பார்க்க செல்கிறார்கள். ஆனால் பார்க்க வந்த பெண்ணைத்தவிற மற்ற அனைவரும் அங்கு இருக்கிறார்கள். இந்த முறையும் ஏமாற்றம் அடைந்தவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார்.

இந்த காலத்தில் சொந்த வீடு இருந்தால்தான் பெண் தருகிறார்கள் என்று உற்ற நண்பனான கருணாகரன் சொல்ல சொந்த வீடு வாங்குகிறார் எஸ்.ஜே. சூர்யா. அந்த வீட்டை வாங்கிய உடனே அவர் தஞ்சாவூரில் பார்க்க சென்ற பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். இப்போது நீங்கள் அந்த நபர் யார் என்று புரிந்துக்கொண்டிருப்பீர்கள். ஆம் பிரியா பவானி சங்கரேதான். அவரும் சென்னையில் ஒரு நகைக்டையில் வேலை பார்க்கிறார்.

ndtjer6

இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள், அதே வேலையில் எஸ்.ஜே.சூர்யாவின் புதிய வீட்டில் எலி ஒன்று வருகிறது. அது செய்யும் தொல்லையில் வீட்டில் வசிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார் எஸ்.ஜே.சூர்யா.

இந்த எலித் தொல்லையில் இருந்து எஸ்.ஜே.சூர்யா எவ்வாறு தப்பிக்கிறார். அதே வேலையில் அந்த எலியால் அவர் சந்தித்த நல்ல விஷயங்கள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் எலி ஒன்று படத்தின் கடைசிவரை ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவது இதுவே முதல்முறை. குறிப்பாக முடிந்த வரை உண்மையான எலியை இயக்குநர் பயன்படுத்தியிருகிறார். அதை தன்னுடைய கதைக்கு ஏற்றவாறு படம்பிடித்ததில் ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

படம் சொல்ல வரும் செய்தி மிகச்சிறியது என்றாலும் படம் தொடங்கி முடியும் வரை எந்த இடத்திலும் தொய்வை ஏற்படுத்தவே இல்லை.

ljiv2ing
 

எஸ்.ஜே.சூர்யா இதுவரை பார்த்திடாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். கைதேர்ந்த கலைஞர் என்பதை இந்த படத்திலும் உறுதிபடுத்துகிறார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு எலியை எதிர்கொண்ட அனுபவம் இருக்கும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இவருக்கு நண்பனாக வரும் கருணாகரன் எப்போது போல் படத்தில் ஸ்கோர் செய்கிறார். கொடுக்கப்பட்டட கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக முடித்து கொடுத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இவர்களையெல்லாம் விட படத்தின் முக்கியமான கதாநாயகனாக வரும் எலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் இன்னொரு பலம். பல காட்சிகளின் பின்னணி இசையில் படத்தோடு பயணிக்க முடிந்தது. கோகுலின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

சில இடங்களில் காவிமயம் தெரிந்தது, அதே நேரத்தில் சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை சில வசனங்கள் நினைவூட்டியது. நிச்சயமாக இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளோடு சென்று பார்க்க வேண்டிய படமாக இப்படம் அமைந்திருக்கிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்