முகப்புவிமர்சனம்

இயக்குநர் இன்னும் யோசித்திருக்கலாம் 'நட்புனா என்னானு தெரியுமா' விமர்சனம்

  | Friday, May 17, 2019

Rating:

இயக்குநர் இன்னும் யோசித்திருக்கலாம் 'நட்புனா என்னானு தெரியுமா' விமர்சனம்
 • நடிகர்கள்:
  கவின்,அருண்ராஜா காமராஜ், ராஜு, ரம்யா நம்பீசன்
 • இயக்குனர்:
  சிவா அரவிந்
 • தயாரிப்பாளர்:
  ரவீந்திரன் சந்திரசேகரன்
 • பாடல்கள்:
  தரன்

சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருகிறார்கள் மூன்று இளைஞர்கள். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மூவரும் தோல்வி அடைய , அதன் பிறகு பள்ளிப்படிப்பை தொடர விருப்பம் இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் ஏதாவது தொழில் செய்து வாழ்க்கையில் முன்னுக்கு வர முடிவெடுக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் அதே பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்து வளர்ச்சி அடைந்திருக்கும் ஒருவரை பார்த்து இவர்களும் அதே தொழிலை தொடங்குகிறார்கள்.

int89k88

 

தங்கள் பகுதியில் இருக்கும் காதல் ஜோடிகளாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைக்கிறார்கள். இதனால் இவர்கள் தொழில் பிரபலமடைகிறது. இந்நிலையில் மூன்று பேரும் ஒரு பெண்ணை பார்க்கிறார்கள். மூன்று பேரும் ஒருவருக்கு தொரியாமல் ஒருவர் அந்த பெண்ணை காதலிக்க இவர்களுக்குள் தொடங்குகிறது பிரச்னை.இறுதியில் அந்த பெண் யாரை கரம் பிடித்தார். இவர்கள் மீண்டும் நண்பர்களாக இணைந்தார்களா இல்லையா என்பதுதான் "நட்புனா என்னானு தெரியுமா" படத்தின் திரைக்கதை.

அந்த மூன்று நண்பர்களாக கவின், அருண்ராஜா காமராஜ், ராஜு ஜெயமோகன் நடித்திருக்கிறார்கள். படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். நண்பர்களாக நடித்திருக்கும் மூன்று கதாபாத்திரங்களும் நல்ல கலைஞர்கள் என்பதை அவர்களுக்கு  கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்து முடித்து நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் நல்ல கலைஞர்களுக்கான கதைக்களமாக இப்படத்தின் திரைக்கதை இல்லையோ என்கிற சந்தேகம் எழுகிறது.

g2u1b5c8

 

கவினின் நடிப்பு பல இடங்களில் மிகைப்படுத்தப்பட்டது போல் இருந்தது. ராஜு ஜெயமோகன் ஆரம்பத்தில் சற்று நடிக்க முயற்சி செய்தது போல் இருந்தாலும். படம் நகர நகர படத்தோடு ஒன்றிவிடுகிறார். படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை கவனம் பெறக்கூடிய நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று பல்வேறு இடங்களில் படத்தை தூக்கிப்பிடிக்கிறார் அருண்ராஜா காமராஜ். படத்தின் கடைசி 45 நிமிடத்தில் பாராட்டுகளையும், கைதட்டல்களைம் பெறுகிறார்கள் அருண் மற்றும் ராஜு.

இந்த படத்தில் கதாநாயகி அறிமுகப்படுத்தும் போது இவர் ரம்யா நம்பீசனாக இருக்கக்கூடாது என்று தோன்றியது. பல்வேறு சவாலான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர், இந்த படத்தில் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் என்ன என்பது பற்றி அறிந்துதான் ஏற்றாரா என்கிற கேள்வி எழுகிறது. இந்த படத்திற்கு பிறகு இவர் கதைத் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.

n49o005g

 

அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர் சரியாக செய்து முடித்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த கதாபாத்திரம் இவருக்கானது இல்லை என்றுதான் பல இடங்களில் தோன்றியது.

ஒரு பெண்ணை மூன்று நண்பர்கள் காதலிப்பது போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. இருந்தாலும் வேறு விதமான கதைக்களத்தை கையாள முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால் வலுவான கதையாக அது அமையவில்லை என்பது எதார்த்தம். இயக்குநர் இன்னும் சற்று முயற்சி செய்திருக்கலாம்.

நண்பர்கள் மூன்று பேரும் இணைந்து வரும் காமெடி காட்சிகளை விட, அருண் மற்றும் ராஜு இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி காட்சிகள் படத்தை நகர்த்துகிறது. பின்னணி இசை ஓரளவிற்கு பரவாயில்லை, பாடல்கள் ஒன்றுகூட நினைவில் நிற்கவில்லை. யுவாவின் ஒளிப்பதிவு நிறைவாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இயக்குநர் இன்னும் யோசித்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்