முகப்புவிமர்சனம்

“பிற்போக்கு கலாச்சார காவலர்களுக்கு சாட்டையடி” - “நேர்கொண்ட பார்வை” விமர்சனம்!

  | Friday, August 09, 2019

Rating:

“பிற்போக்கு கலாச்சார காவலர்களுக்கு சாட்டையடி” - “நேர்கொண்ட பார்வை” விமர்சனம்!
 • பிரிவுவகை:
  சோஷியல் டிராமா
 • நடிகர்கள்:
  அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிராமி
 • இயக்குனர்:
  எச்.வினோத்
 • தயாரிப்பாளர்:
  போனிகபூர்
 • பாடல்கள்:
  யுவன் சங்கர் ராஜா

Thala Ajith Kumar's Nerkonda Paarvai Review: கடந்த ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி அனைவராலும் கொண்டாடி தீர்த்த படம் ‘பிங்க்’. இந்த படத்தை தமிழில் போனிகபூர் தயாரிப்பில் “நேர்கொண்ட பார்வை” என்கிற தலைப்பில் எச்.வினோத் இயக்க அஜித் நடித்துள்ளார்.  ஆகஸ்ட் மாதம் 8ம் நாள் வெளியான இப்படம். அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து.

இந்திய கலாச்சார சூழலில் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களை எல்லாம் பளார் என்று அறைந்தார் போல் கேள்வி எழுப்புகிறது இப்படம். பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் மூன்று பெண்கள் தனக்கு நேர்ந்த அநீதியை துணிச்சலாக எதிர்கொள்வதை காவல்துறையும், சட்டமும், இந்த சமூகமும் எவ்வாறு அனுகுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே வாரி இறைக்கப்படும் மற்றொரு வன்முறையை இந்த படம் ஆழமாக பதிவு செய்திருக்கிறது.

qvk816v8

ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் தங்கி வெவ்வேறு இடங்களில் வேலை செய்து வருகிறார்கள். இதில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுபவராக இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோருடன் மூன்று பெண்களும் விருந்துக்கு செல்கிறார்கள். அப்போது அர்ஜுன் சிதம்பரம், ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, இதில் அர்ஜுன் சிதம்பரத்தை தாக்கிவிட்டு ஸ்ரத்தா ஸ்ரீநாத் தப்பித்து செல்கிறார். ஆனால் அர்ஜுன் சிதம்பரம், ஸ்ரத்தாவை பழிவாங்க தொடர்ந்து அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

அர்ஜுனின் தொல்லையை பற்றி போலீசில் புகார் கொடுக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் போலீஸ், அர்ஜுன் முதலில் புகார் கொடுத்ததாக கூறி ஸ்ரத்தா ஸ்ரீநாத்தை கைது செய்கிறார்கள். இவை அனைத்தையும் எதிர் வீட்டில் குடியிருக்கும் வழக்கறிஞர் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஆதரவாக வாதாட களம் இறங்குகிறார். இந்த வழக்கு என்னவானது, அஜித் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

61svl84g

இந்தியில் வெளியான பிங்க் படத்தில் அமித்தாப்பச்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அஜித் ஏற்று நடித்திருக்கிறார். பிங்க் படத்தின் ஜீவன் குறையாமல் அப்படியே திரையேற்றியதிலே தனது முதல் வெற்றியை பதிவு செய்து விடுகிறார் எச்.வினோத். அஜித்தின் ரசிகர்களுக்காக சண்டை காட்சிகளும், அழகிய காதலும் சேர்த்து விருந்து வைத்திருக்கிறார். நேர்த்தியான நடிப்பில் அஜித் பூர்த்தி செய்து ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார். படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் அஜித் என்கிற இந்த கதாபாத்திரம் கடைசி வரை சுமந்துச்சென்றிருக்கிறது. ‘No என்று சொன்னால் No’ என்றுதான் பொருள் என அஜித் கர்ஜிக்கும் போது அரங்கம் அலருக்கிறது.

படம் தொடங்கியதில் இருந்தே உளவியல் ரீதியான சிக்களில் இருக்கும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவருடன் நடித்திருக்கும் அபிராமி, ஆண்ட்ரியா அவர்களின் கதாபாத்திரத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

2sstctb

குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞராக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே அறிமுக நடிகர் என்பதை பல இடங்களில் தெரிந்துக்கொள்ள முடிந்தது. இவரைத் தவிற மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்து கொடுத்து கவனம் பெறுகிறார்கள். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் ஆழமாக நிற்கிறார் வித்யாபலன்.

அஜித் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை என்பது தித்திக்கும் தேனின் மீது சீனியை கொட்டுவது போல் தெகிட்டாத இனிப்புதான். அந்த வகையில் இப்படத்தின் இன்னொரு கதாநாயகனாகிறார் யுவன் சங்கர் ராஜா. நிரவ்ஷாவின் ஒளிப்பதிவும், கோகுல் சந்திரனின் படத்தொகுப்பு நேர்த்தி. மொத்தத்தில் பிற்போக்கு கலாச்சார காவலர்களுக்கு சாட்டைஅடி “நேர்கொண்ட பார்வை”.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்