முகப்புவிமர்சனம்

திகிலும் காமெடியும் கலந்த கலவை - ‘பெட்ரோமாஸ்' விமர்சனம்!

  | Saturday, October 12, 2019

Rating:

திகிலும் காமெடியும் கலந்த கலவை - ‘பெட்ரோமாஸ்' விமர்சனம்!
 • பிரிவுவகை:
  ஹாரர் காமெடி
 • நடிகர்கள்:
  தமன்னா, முனிஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டி.எஸ்.கே
 • இயக்குனர்:
  ரோஹின் வெங்கடேசன்
 • தயாரிப்பாளர்:
  A.குமார்
 • பாடல்கள்:
  ஜிப்ரான்

சென்னையில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் 4 பேய்கள் இருக்கின்றன. இந்த பங்களாவை விற்க ஒரு கூட்டம் முடிவு செய்கிறது. ஆனால் இந்த வீட்டில் பேய் இருப்பதால் வீட்டை வாங்க வருபவர்கள் அலரியடித்து ஓடிவிடுகிறார்கள். இதனால் இந்த வீட்டை விற்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வீட்டில் பேய் இல்லை என்பதை நிரூபிக்க நான்கு பேர் நான்கு நாள் தங்குகிறார்கள். நான்கு பேருக்கும் பயத்தை ஏற்படுத்தி வீட்டை விட்டு துரத்த பேய்களும் முடிவு செய்கின்றன. இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை கலகலப்பாக சொல்லும் படமே ‘பெட்ரோமாஸ்’.

46t180c ;டாப்சி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அனந்தோ பிரம்மா’ என்கிற படத்தின் ரீமேக்தான் ‘பெட்ரோமாஸ்’. ‘அதே கண்கள்’ என்கிற சிறப்பனா திகில் படத்தை கொடுத்த ரோஹின் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். தமிழில்  இவர் இயக்கத்தில் வெளியான “அதே கண்கள்” ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை அடுத்து மீண்டும் ஒரு ஹாரர் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து வரவேற்பை பெற்றுள்ளார். அதற்கு முக்கிய காரணம் கதாபாத்திரங்கள் தேர்வு தமன்னா, யோகி பாபு, முனிஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டி.எஸ்.கே., பிரேம் உள்ளிட்ட பிரபலங்கள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தின் கணத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

f5c9glrg ;தமன்னா, யோகி பாபு நடித்திருந்தாலும் இந்த படத்தின் பிரதான நாயகன் முனிஸ்காந்த்தான். பேய்கள் குடியிருக்கும் வீட்டில் பேய்கள் இல்லை என மற்றவர்களை நம்ப வைக்க முனிஸ்காந்த் மருத்துவமனையில் சந்திக்கும் காளி வெங்கட், சத்யன், டி.எஸ்.கே., மூவருக்கும் பணம் கொடுப்பதாக கூறி அந்த வீட்டிற்கு அழைத்துச்செல்கிறார். இந்த நாள்வரும் பேய்களாக இருக்கும் தமன்னாவின் குடுப்பதத்துடன் என்ன செய்கிறார்கள். அந்த வீட்டிற்கும் தமன்னாவிற்கும் என்ன தொடர்பு. தமன்னாவின் ஆவி யாரை பழிவாங்க பேயாக இருக்கிறது என்பதை கூறுகிறது திரைக்கதை. படத்தின் முதல் பாதி கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் போடப்படும் முடிச்சுகளை இரண்டாம் பாதியில் கலகலப்பாக அவிழ்க்கிறார் இயக்குனர். சற்று பொருமையுடன் படத்தை பார்தோமேயானால் அதற்கான நியாத்தை நீங்கள் நிச்சயம் அறிந்துக்கொள்ளலாம். திரைக்கதையில் கவனம் செலுத்திய இயக்குநர் கிளைமேக்ஸ் காட்சியிலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றியது. மற்றப்படி படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது.<\p> <p>முனிஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டி.எஸ்.கே நாள்வரும்தான் படத்தை தாங்கி பிடிக்கும் தூண்களாக இருக்கிறார்கள். இவர்களின் வித்யாசமான கதாபாத்திரங்கள் அரங்கை அலர வைக்கும் அளவிற்கு சிரிப்பை வரவைக்கின்றன. ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து போகும் யோகி பாபுவும், மைனா நந்தினியும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார்கள். ;தமன்னா எப்போதும் போல் கதைக்கான ஆழத்தை அறிந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி ஸ்கோர் செய்கிறார். இவருடன் நடித்திருக்கும் அத்தனைபேரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி பாராட்டுகளை பெறுகிறார்கள்.  <p>பேய் படம் என்றாலே தானாக கதவு மூடுவது, காற்று வேகமாக அடிப்பது என பழைய காட்சிகள் இடம் பெற்றாலும் படத்தின் இன்னொரு கதாநாயனாக இசை அமைப்பாளர் ஜிப்ரான் அதிரவைத்திருக்கிறார். டேனியின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். மொத்தத்தில் பெட்ரோமாஸ் குழந்தைகளுடன் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படம்.<\p>

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்