முகப்புவிமர்சனம்

மகளை காக்கப் போராடும் தாய்..! - திகிலூட்டும் 'மம்மி - Save Me' விமர்சனம்..!

  | Friday, September 18, 2020

Rating:

மகளை காக்கப் போராடும் தாய்..! - திகிலூட்டும் 'மம்மி - Save Me' விமர்சனம்..!
 • பிரிவுவகை:
  Thriller
 • நடிகர்கள்:
  Priyanka Upendra, Madhusudhan Rao, Yuvina
 • இயக்குனர்:
  Lohit
 • தயாரிப்பாளர்:
  JSK Film Corporation
 • எழுதியவர்:
  Lohit
 • பாடல்கள்:
  Ajneesh, Lokanath

இணைய வழி வெளியீடு..! அண்மைக்காலமாக குறிப்பாக இந்த லாக் டவுன் காலத்தில் மக்களாகிய நாம் புதிதாக கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் பல திரைப்படங்கள் இந்த பாணியில் வெளியாகி வருவது நல்ல ஆரோக்கியமான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது இயக்குனர் H.L. லோஹிட் இயக்கத்தில் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சார்பில் சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் தான் "மம்மி save me". 

தல அஜித்தின் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான ராஜா படத்தின் கதாநாயகியாக கலக்கிய பிரியங்கா உபேந்திரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அவருடைய மகளாக களமிறங்கி உள்ளார் குழந்தை நட்சத்திரமான யுவினா. இவர்களுடன் திரையை பகிர்ந்துள்ளார் பிரபல நடிகர் மதுசூதன் ராவ். படத்தொகுப்பை ரவிச்சந்திரன் கவனிக்க அஜ்னீஷ் மற்றும் லோகநாத் இசையமைப்பாளர்களாக அசத்தியுள்ளார். மிரட்டலான இந்த திகில் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் வேணு. 

"மம்மி Save Me", நாம் பலமுறை பார்த்து ரசித்த ஒரு கதைக்களம், திகில்பட ரசிகர்களுக்கு நல்ல விருந்து என்றால் அது மிகையல்ல. ட்ரொன் காட்சியில் ஆங்கிலப்பட பாணியில் மெல்லிய பின்னணி இசையுடன் தொடங்குகிறது திரைப்படம். இசையமைப்பாளர்களுக்கும், ஒளிப்பதிவாளருக்கும் தொடக்கத்திலே ஒரு கைதட்டல். கணவனை இழந்த கர்பமுற்ற தாய் தனது கணவன் தனக்காக கட்டிய வீட்டில் தனது மகளுடன் குடியேற, ஆரம்பத்திலேயே தொடங்குகிறது பிரச்சனை. 

தனது தாய், சகோதரி மற்றும் மகளுடன் நாயகி அந்த வீட்டில் தங்கியிருக்க, தனது பிறந்தநாளன்று ஒரு அழகிய பரிசு ஒன்றை பெறுகிறாள் அந்த சிறுமி. அந்த பரிசின் மூலம் அவளுக்கு கிடைக்கிறது ஒரு புதிய நட்பு. மகளுக்கு கிடைத்த புதிய நடிப்பின் மூலமாக வீட்டில் பல பிரச்சனைகள் வர, அதற்கு யார் காரணம் என்பதை விளக்க வருகிறார் மதுசூதன் ராவ். தனது மகளுக்கு கிடைத்த அந்த நட்பு எத்தகையது..? போராடும் தனது மகளை அந்த கர்பமுற்ற தாய் எவ்வாறு காப்பாற்றுகிறார்..? யார் தான் அந்த நட்பு..? என்பதை பல திகில் கலந்த காட்சிகளுடன் வெளிப்படுத்தும் படமே "மம்மி Save Me". திரைக்கதையோடு ஒன்றிய இசைக்கும் ஒளிபதிவிற்கும் மீண்டும் ஒரு சபாஷ். 

திரைக்கதையில் அவ்வப்போது ஏற்படும் சில தொய்வு சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் மேலோங்கும் இசை நம்மை வீட்டில் உள்ள இருக்கையின் நுனிக்கு வரவழைத்துள்ளது. பிரியங்கா தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த குழந்தை நட்சத்திரமான யுவினாவும் அளவான பயத்துடன் அருமையாக நடித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com