முகப்புவிமர்சனம்

பிரம்மாண்ட காட்சிகளில் மிதக்கும் பிரபாஸ் – சஹோ விமர்சனம்

  | Saturday, August 31, 2019

Rating:

பிரம்மாண்ட காட்சிகளில் மிதக்கும் பிரபாஸ் – சஹோ விமர்சனம்
 • பிரிவுவகை:
  ஆக்ஷன் டிராமா
 • நடிகர்கள்:
  பிரபாஸ், ஷர்தா கபூர், அருண் விஜய்
 • இயக்குனர்:
  சுஜித்
 • பாடல்கள்:
  ஜிப்ரான்

பிரம்மாண்ட படைப்பான ‘பாகுபலி’ படத்தின் தொடச்சிக்கு பின் பிரபாஸ் பிரம்மாண்ட செலவில் அடுத்து நடித்திருக்கும் படம் ‘சஹோ’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
 
இப்போது கதைக்குள் வருவோம். மிகப்பெரிய கேங்ஸ்டர் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு யார் வெற்றி பெற்று சாம்ராஜ்யத்தை அமைக்கிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன் லைன்.

 
eof46ck8
 
வாஜி நகரத்தில் கேங்ஸ்டராக இருக்கும் ராய் (ஜாக்கி ஷெராஃப்). தனது இல்லீகள் தொழிலை லீகல் ஆக்க முற்படுகிறார். ராய் இடத்தில் அமருவதற்கு அவரது கூட்டத்திலே சிலர் காத்திருக்கிறார்கள். அவர்களால் ராய் கொல்லப்படுகிறார். ராயை கொன்ற தேவராஜ் (சங்கி பாண்டே) அவருக்கு உதவியாக இருந்த அத்தனைபேரையும் பழிவாங்கி தன் தந்தை ராயின் சாம்ராஜ்யத்தை மகன் சாஹோ எப்படி கைபற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
 
சுஜித் இயக்கி இருக்கும் இப்படம் காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமும், சண்டை காட்சிகளும் நிறைந்து இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பல்வேறு திருப்பங்களோடு கதை களத்தை நகர்த்துகிறார். அவை சற்று குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. எளிமையாக கதையோடு ஒன்றிட முடியாதபடி முதல் பாகம் நகர்கிறது. மும்பையில் காட்சியாக்கப்பட்டிருக்கும் சண்டைகாட்சி ஒன்றில் பாம்பு, சிறுத்தை, இறைச்சி கடை, உடற்பயிற்சி கூடம் என அடுக்குள் நிறைந்த அந்த சண்டை எதார்த்தத்தை தாண்டியதாக இருக்கிறது. பிரம்மிப்பு காட்ட வேண்டும் என்பதற்காக மிகைபடுத்தப்பட்டுள்ளது அந்த காட்சி. படத்தின் முதல் பாதியை கடக்க வேண்டும் என்றால் சற்று பெறுமை அவசியம் வேண்டும் ரசிகர்களுக்கு. முதல் பாதியில் போடப்படும் முடிச்சுகளை இரண்டாம் பாதியில் அவிழ்கிறார் இயக்குநர். ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை பல்வேறு குழப்பங்களுக்கு பதில் சொல்வதால் மீண்டும் படம் ஒரு குழுப்ப நிலைக்கே திரும்புகிறது. திரைக்கதையிலும் காதல் கதையிலும் இயக்குநர் இன்னும் பொறுமையாக கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
 
43maosjg
 

பாகுபலியில் பார்த்த பிரபாஸா இவர் என்று தோன்று அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாரியிருக்கிறார் பிரபாஸ். எல்லா படங்களிலும் நாயகன் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றாலும் கதைக்கு பொருத்தமாக நாயகனை தயார் படுத்துவது இயக்குநரின் வேலை அதை அவர் சரியாக செய்யவில்லை என்பதை இப்படத்தில் பிரபாஸை பார்க்கும் போத தெரிகிறது. கதை தேர்வுகளில் அவர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நடப்பது, ஓடுவது, பறப்பது என பிரம்மாண்டமான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன ஆனால் அவை இந்த கதைகளத்திற்கு தேவையா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
 
இந்தி திரையுலகில் தனி அடையாளத்தை பதித்திருக்கும் ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்கிற செய்தி அறிந்ததுமே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே மிச்சம். அவரையும் இயக்குநர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. கடைசி வரை ஏமாற்றம் நிறைந்த நடிகராகவே வலம் வருகிறார். ஒரு பாடலுக்கு மட்டும் தாராளம் காட்டுகிறார். மற்றபடி வழக்கமான நடிகராகவே வந்து போகிறார்.
 
t1kkq79o

அருண் விஜய் எதார்த்தமான நடிப்பில் தன் வேலையை செய்துமுடித்துள்ளார். அவர் மீது சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் அருண் விஜய்.
 
மதியின் ஒளிப்பதிவில் வாஜி நகரமும் மும்பையும் பிரம்மாண்ட கட்டிடங்களும் காட்சிகளாக விரிகின்றன. படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு தான். ஜிப்ரானின் பின்னணி இசைதான் தொய்வைக் குறைக்க உதவியுள்ளது.
 
எளிமையாக சொல்ல வேண்டிய விஷயத்தை நீண்ட நேரமாக இழுத்துச்சொன்றது தொய்வை ஏற்படுத்தியது. படத்தொகுப்பாளர் இன்னும் பல காட்சிகளை நீக்கி இருக்கலாம். படத்தின் நேரத்தை குறைத்திருக்கலாம். நீங்கள் நிதானமாக படம் பார்ப்பவர் என்றால் இந்த படத்தை நீங்கள் காணலாம்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்