முகப்புவிமர்சனம்

கதைக்கு ஏற்ற புது க்ளைமேக்ஸ்..! வெல்-டன் ‘வால்டர்’..!

  | Friday, March 13, 2020

Rating:

கதைக்கு ஏற்ற புது க்ளைமேக்ஸ்..! வெல்-டன் ‘வால்டர்’..!
 • பிரிவுவகை:
  Cop-Thriller
 • நடிகர்கள்:
  Sibi, Shirin Kanchwala, Natty Natrajan, Samuthirakani, Charlie
 • இயக்குனர்:
  U. Anbu
 • தயாரிப்பாளர்:
  Shruthi Thilak
 • பாடல்கள்:
  Dharma Prakash

சிபி சத்யராஜ் ‘வால்டர்’ எனும் காவல்துறை அதிகாரியாக (ASP) நடித்துள்ள திரைப்படம் ‘வால்டர்’. யு. அன்பு இயக்கியுள்ள இப்படத்தை 11:11  productions பேனரின் கீழ் ஷ்ருதி திலக் தயாரித்துள்ளார். சிபியின் காதலியாக படத்தில் கொஞ்சம் அழகு சேர்க்க ஷிரின் கன்ச்வாலா நடித்துள்ளார். படத்தில் காமெடியன் என்று யாரும் இல்லை. மூத்த நடிகர் சார்லி போலீஸ் ஏட்டாக படத்தின் முதல் பாதி முழுக்க சிபியுடனே இருக்கிறார்.

கும்பகோனத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சர் பண பலம், ஆள் பலம் என  அந்தஸ்துடன் இருக்கிறார். தனது பதவிக்கும் அந்தஸ்துக்கும் பங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அழித்துவிடுவார். டிப்பார்ட்மண்ட் சொல்லும் வேலையை கணக் கச்சிதமாக முடிக்கும் போலீஸாக இருக்கும் ‘வால்டர்’, முக்கிய புள்ளியான சமுத்திரகனியை என்கவுண்டர் செய்கிறார். அதற்கு பழிவாங்க நண்பன் ‘நட்டி’ நடராஜன் வருகிறார். இதற்கு இடையில் பல்வேறு ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். இறுதியில் ஹீரோ சிபி, அந்த குழந்தகள் ஏன் கடத்தப்படுகிரார்கள், யார் இதன் பின்னணி, குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார். பழிவங்கும் வெறியில் இருக்கும் நட்டியை எப்படி சமாளிக்கிறார், எல்லாவற்றிற்கும் தொடர்பு என்ன என்பதை கண்டறிந்து, எப்படி பிரச்சினைகளை முடித்து வைக்கிறார் என்பது தான் கதை. இவற்றுக்கு இடை இடையில் ரொமான்ஸ் காட்சிகளை சொருகி ஒரு கலவையான கமர்சியல் படமாக தந்துள்ளார் இப்படத்தின் இயக்குநர் U. அன்பு.

தொடக்கத்திலேயே ஒரு அரசியல்வாதியை விவரித்து காட்டும்போதே தெரிந்துவிடுகிறது, இவரை வைத்துதான் இறுதிதியில் ஒரு தரமான சம்பவம் நடக்கப்போகிறது என்று. மிகக் குறைந்த காட்சிகளிலேயே வந்தாலும், எப்போதும் போன்ற இயல்பான நடிப்பை வெளிப்படித்தி தனது பங்கை சரியாக நிறைவு செய்தூள்ளார் சமுத்திரக்கனி. 

ஒரு போலீஸ் ஹீரோ, அவருக்கு ஒரு வீடு, வீட்டை விட்டால் ஸ்டேஷன், இவர் தான் ஹீரோ என்பதை உறுதிபடுத்த ஒரு அழகிய காதலி. கதாநாயகியின் பின்னணி என்ன என்பதை தெரியப்படுத்திய அளவிற்கு கூட ஹீரோவின் பின்னணி என்ன என்பதை தெளிவாக தெரியப்படுத்த மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

‘நட்டி’ நடராஜனின் அறிமுக காட்சிலேயே, இவர் நல்லவரா கெட்டவரா என பார்வையாளர்களை குழப்பத்தில் வைத்திருக்க, இயக்குநர் எடுத்திருக்கும் முயற்சி கொஞ்சம் வொர்க் அவுட் ஆனது என்று சொல்லலாம். நட்டி வரும் காட்சிகள் முதல் பாதியில் அடடா கதை சூடு பிடிக்கிறது என்று நினைக்கும்போதெல்லாம் காரணமே தெரியாமல் ஹீரோயின் வந்துவிடுகிறார். கதைக்கு இடஞ்சலாக இவர் இருந்தாரா அல்லது ஹீரோ-ஹீரோயின் காதலுக்கு இந்த கதை இடஞ்சலாக இருந்ததா என்பது தெரியவில்லை. நடிகை ரித்விகா கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

பலரும் அறிந்திடாத புதிய தகவலுடன் இயக்குநர் நல்ல முயற்சியை செய்துள்ளார். ஆனால் திரைக்கதை மற்றும் வசனத்தில் ஏற்பட்ட கவனக்குறைவால் சில இடங்களில் லேக் ஆகிறது, மற்றும் கதாப்பாத்திரங்களின் மாஸ் குறைகிறது. கதை நகர்வை விறுவிறுப்பாக்க தர்ம பிரகாஷின் பின்னணி இசை சற்று உதவியுள்ளது. படத்தில் க்ளைமேக்ஸில் புதிதாக கதைக்கு ஏற்ப அமைந்துள்ளது. நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும்.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்
Listen to the latest songs, only on JioSaavn.com