முகப்புவிமர்சனம்

காமெடி கலாட்டா ! சிக்சர் விமர்சனம்

  | Friday, August 30, 2019

Rating:

காமெடி கலாட்டா ! சிக்சர் விமர்சனம்
 • பிரிவுவகை:
  காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  வைபவ், சதீஷ், பல்லக் லால்வாணி
 • இயக்குனர்:
  சாச்சி
 • தயாரிப்பாளர்:
  திணேஷ் கண்ணன்
 • பாடல்கள்:
  ஜிப்ரான்

சாச்சி இயக்கத்தில் வைபவ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘சிக்சர்’. காமெடி கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடித்து வைபவ் இந்த படத்திலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இப்போது கதைக்குள் செல்வோம்.

மாலைகண் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வைபவ் எந்த வேலைக்கு சென்றிருந்தாலும் மாலை 6 மணிக்கொல்லாம் வீடு வந்து சேந்திடுவார். உலகின் ஒரு பாதியை பார்த்திராத குறும்பு இளைஞனாக வலம் வருகிறார்.

369sno88

தனக்கு இருக்கும் மாலைகண் நோய் பிரச்னையை தன் நெருங்கிய நண்பர்களைதவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த சமயத்தில்தான் நாயகி (பல்லக் லால்வாணி)யை சந்திக்கிறார். நண்பர்களாகும் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். ஆனால் வைபவ்க்கு மாலைகண் நோய் இருப்பதை மறைத்து விடுகிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாலித்து நாயகியை எப்படி இவர் கரம் பிடித்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

காமெடி களத்தை நம்பி இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறார் சாச்சி. ஒவ்வொரு திருபங்களிலும் காமெடி வெடியை போட்டு சிரிக்க வைத்திருக்கிறார். சில இடங்களில் காமெடி என்ற பெயரில் கடித்தும் வைத்திருக்கிறார். சமூகத்தில் பணபலமும் அரசியல் பலமும் உள்ள பிரபல ரவுடிக்காக கல்லூரி மாணவிகளை பாலியல் இச்சைக்கு அழைக்கும் பேராசிரியர் போன்ற காட்சிகள் சமீபத்தில் நடந்த சம்பவங்களை நினைவு படுத்தியது. கதை இந்த சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறதோ என்று நாம் அனுமானித்தால் நமக்கு ஏமாற்றம்தான். கதை முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி எடுத்திருப்பதால் கதைவே அங்கிருந்து வேறு தளத்திற்கு நகர்கிறது.

2ha81hsg

சமூகத்தில் மாற்று பாலினத்தவர்கள் குறித்த பார்வை வெகுவாக மாறிவரும் சூழலில் மாற்று பாலின மக்களான LGBTIQ மக்களை தமிழ் சினிமாவில் சித்தரிக்கும் போக்கு இன்னும் மாறவில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது. இதை இந்த இடத்தில் கூறுவதற்கு காரணம், இந்த படத்தில் அமைக்கப்பட்ட காட்சி ஒன்று இந்த கேள்வியை எழுப்ப காரணமாயிருக்கிறது. நகைச்சுவை தேவை என்பதற்காக மாற்று பாலினத்தவர்களை கேலி செய்யும் விதமான சித்தரிப்புகள் கடும் கண்டனத்துக்குறியது. நகைச்சுவைக்காக இப்படியான சித்தரிப்புகள் சமத்துவத்திற்கு எதிரானது என்பதை இயக்குநர் உணராதது ஏன் என்பது தெரியவில்லை.

நாயகனாக நடித்திருக்கும் வைபவ் எப்போதும் போல் இயல்பான நடிப்பை வெளிபடுத்தி கவனம் பெறுகிறார். நாயகியாக நடித்திருக்கும் பல்லக் லால்வாணி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். ராதா ரவி, சதீஷ், ராமர், இளவரசர் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.

9n7m6gvo

ஜிப்ரானின் இசை முத்தையாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில் படம் ‘சிக்சர்’ இல்லை பவுண்ரி.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com