முகப்புவிமர்சனம்

எந்திரத்திற்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் மரண போராட்டாம்- Terminato Dark Fate விமர்சனம்

  | Thursday, October 31, 2019

Rating:

எந்திரத்திற்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் மரண போராட்டாம்- Terminato Dark Fate விமர்சனம்
 • நடிகர்கள்:
  அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், மெக்கன்சி டேவிஸ், நட்டாலியா ரியஸ்
 • இயக்குனர்:
  டிம் மில்லர்
 • தயாரிப்பாளர்:
  ஜேம்ஸ் கேமரூன்
 • பாடல்கள்:
  டாம் ஹோல்கன்போர்க்

எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வரும் எந்திரம் ஒன்று எந்திரங்களுக்கு எதிரான போரளியை கொல்ல நடக்கும் போராட்டமே டெர்மினேட்டர் டார்க் ஃபேட்.
 
மனித இனத்திற்கும் எந்திரங்களுக்கும் இடையேயான போராட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்க்கிறது. எந்திரங்களை அழிக்கும் ஒரு போர்குணம் மிக்க ஒரு போராளி ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறக்கிறார்கள். அவர்களை கொல்ல ஒரு ரோபோட் உருவாக்கப்படுகிறது.
நிகழ்காலத்தில் இருக்கும் நட்டாலியா ரியஸ் (Natalia Reyes), கொல்ல எதிர்காலத்தில் இருந்து அதிநவீன ரோபோவாக கேப்ரில் லூனா (Gabriel Luna) வருகிறார். நட்டாலியாவை காப்பாற்ற மெக்கன்சி டேவிஸ் (Mackenzie Davis) ம் எதிர்காலத்தில் இருந்து வருகிறார். இவருடன் நிகழ்காலத்தில் இருக்கம் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger)  லிண்டா ஹாமில்டன் (Linda Hamilton) ஆகியோர் உதவியாக இருந்து நட்டாலியாவை காப்பாற்றுகிறார்கள். இவர்களுக்கு அந்த ரோபோவுக்கும் இடையே நடக்கும் ஸ்வாரஸ்யமான போராட்டமே இப்படத்தின் கதை.
 
1984ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன்(James Cameron) இயக்கிய The Terminator திரைப்படம் உலக அரங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. ரோபோவாக அர்னாட்டு நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு Terminator 2: Judgment Day என இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார் ஜேம்ஸ். அதில் அர்னால்டு கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை அடுத்து மூன்றாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இது குறித்து எந்த தகவலும் கிடைக்காதது டெர்மினேட்டர் ரசிகர்களும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்வாரஸ்யமான கதைகளத்தை கையில் எடுத்து டெர்மினேட்டர் டார்க் ஃபேட் தற்போது வெளியாகயுள்ளது. ஆனால் இம்முறை இந்த படத்தை ஜேம்ஸ் இயக்கவில்லை. இவருக்கு பதிலாக டிம் மில்லர் இந்த படத்தை இயக்கி இருந்தார். ஜேம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
 
கடந்த காலங்களில் அர்னாடு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்து. ஆனால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் கடைசி நேரத்திலே தரிசம் கொடுத்து மிரட்டிவிட்டு போகிறார். அதோ துடிப்பும் நடிப்பும் இன்னும் அவர் தக்கவைத்திருக்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்திதான்.
 
மெக்கன்சி டேவிஸ் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். அவர் படம் முழுவதும் பயணித்து தன் பங்கை நிறைவு செய்கிறார். லிண்டா ஹாமில்டன் கூடுதல் கவணம் பெற்று படத்தின் ஸ்வாரஸ்யத்தை கூட்டுயிருக்கிறார். வில்லன் ரோபோவாக வரும் கேப்ரில் லூனா தன் அதிரடி ஆட்டத்தை குறைவில்லாம் நிறைவு செய்திருக்கிறார்.
 
அதிநவீன தொழில்நுட்பம் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு தென்பட்டாலும் படத்தின் அதிரடி காட்சிகள் படத்தின் ஸ்வாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது என்தான் சொல்ல வேண்டும்.      டாம் ஹோல்கன்போர்க் இசை படத்திற்கு பலம் கொடுத்திருக்கிறது. கென் செங்கின் ஒளிப்பதிவு பிரம்மாண்டம். மொத்தத்தில் எந்திரங்களுக்கம் மனிதனுக்கு நடக்கும் பெரும் போராட்டத்தை தன் கற்பனை திறனால் கண் முன்நிகழ்த்தி ஆச்சர்யமூட்டுகிறது டெர்மினேட்டர் டார்க் ஃபேக். 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com