முகப்புவிமர்சனம்

இன்னொரு முறை பார்க்கலாம் ‘தி லயன் கிங்’ விமர்சனம்!

  | Wednesday, July 31, 2019

Rating:

இன்னொரு முறை பார்க்கலாம் ‘தி லயன் கிங்’ விமர்சனம்!
 • பிரிவுவகை:
  அட்வென்சர் டிராமா
 • இயக்குனர்:
  ஜோன் ஃபேவரூ
 • பாடல்கள்:
  ஹான்ஸ் ஷிம்மர்

கடந்த 1994ம் ஆண்டு உலக திரையரங்கையே அதிர வைத்தது அனிமேஷன் திரைப்படம் ‘தி லயன் கிங்’.  சுமார் 25ஆண்டுகள் கழித்து தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிரடி அனிமேஷன் முறையில் வெளியிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஃபேவரூ இந்த படத்தை இயக்கி உள்ளார்.

தமிழில் சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்த் சாமி, ரோபோ சங்கர், சிங்கம் புலி, மனோ பாலா, ஆகியோர் பினினணி குரல் கொடுத்துள்ளனர்.  பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். இப்போது கதைக்குள் வருவோம்.

qiattbeo
 

காட்டை ஆட்சி செய்யும் முஃபாசா சிங்கத்தின் மகனாக வரும் நம் படத்தின் கதாநாயகன் சிம்பா, தனது கொடிய சித்தப்பா ஸ்காரின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்து எப்படி காட்டுக்கு ராஜாவாகிறார் என்பதுதான் படத்தின் கரு.  சிம்பாவுக்கும், ஸ்காருக்கும் இடையே நடைபெறும் இந்த போராட்டமே கதைகளத்தை இன்னும் அழகுபடுத்தி நகர்த்துகிறது.

சித்தப்பாவின் சூழ்ச்சியில் இருந்து வெளிவரும் சிம்பாவிற்கு டிமோம், பும்பா என்கிற இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். வாழ்வின் ரகசிய மந்திரமான ‘ஹகுனா மட்டாடா’ மந்திரத்தை சிம்பாவிற்கு கற்றுக்கொடுக்கிறார்கள். மந்திரத்தை கற்றுக்கொள்ளும் நமது கதாநாயகன் இயல்பாகவே துறுதுறுவென இருப்பவன் என்பதால் படம் முழுவதும் கவனம் ஈர்க்கிறான். சிம்பாவின் காதலியாக வரும் நாலாவின் கதாபாத்திரம் சிறப்பு.

tv1m37mg
 

சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு தமிழ் திரையிலகை சேர்ந்த பிரபலங்களே பின்னணி குரல் கொடுத்து வரும் யுக்தி கையாளப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்திற்கு பின்னணி குல் கொடுத்த நமது கலைஞர்கள் அனைவரையும் பாராட்டியே ஆகவேண்டும். அந்த அளவிற்கு இந்த படத்தில் எல்லோருடைய குரலுத்ம பொருத்தமாக அமைந்திருந்தது.

காமெடி லூட்டிக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதை நகர்கிறது. அப்பாவைக்கொன்ற வில்லனை பழிவாங்கும் மகனின் பழைய கான்செப்ட் என்றாலும் தொழிற்நுட்பத்தின் மூலமாக நவீனப்படுத்தப்பட்ட இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. மிருகங்கள் வாய் பேசும். அவர்களுக்குள் ஒரு காதல், அன்பு கோபம் என்று கற்பனை கதாபாத்திரம் என்றாலும் உணர்வு பூர்வமான கதைக்களமாக தி லயன் கிங் அமைந்திருக்கிறது.  குழந்தைகள் கொண்டாடும் படமாகவும் பெரியர்வகளுக்கு கருத்துகளை பகிரும் படமாகவும் தி லயன் கிங் அமைந்துள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்