முகப்புவிமர்சனம்

பார்க்க வேண்டிய படம் ‘தோழர் வெங்கடேசன்’ - விமர்சனம்!

  | Friday, July 12, 2019

Rating:

பார்க்க வேண்டிய படம் ‘தோழர் வெங்கடேசன்’ - விமர்சனம்!
 • நடிகர்கள்:
  ஹரி சங்கர், மோனிகா
 • இயக்குனர்:
  மகாசிவன்
 • தயாரிப்பாளர்:
  சகிஷனா

இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மகாசிவன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘தோழர் வெங்கடேசன்’. அறிமுக நடிகர்கள் ஹரி சங்கர் மோனிகா இன்னும் பலர் நடித்துள்ள இப்படம் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயல்படும் போக்குவரத்து நிர்வாக சீர்கேடுகளை பேசும் படமாக உருவாகி இருக்கிறது.

காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் சோடா தயாரித்து விற்பனை செய்யும் சாதாரன இளைஞனாக அறிமுகமாகிறார் வெங்கடேசன்(ஹரி சங்கர்). அதே கிராமத்தில் இட்லி கடை வைத்திருக்கும் பெண் ஒருவரின் மகள் மோனிகா.

தாய் தந்தையை இழந்த வெங்கடேசன் தினமும் இரவு உணவுக்காக மோனிகாவின் கடையில் சாப்பிடுவது வழக்கம். வெங்கடேசன் மீது மோனிகாவின் அம்மாவிற்கு நல்ல மதிப்பு உண்டு. திடீரென் மோனிகாவின் அம்மா இறந்து விட தாயை இழந்த இளம் பெண்னை சொந்தம் கொண்டாடும் ஆணாதிக்கச் சமூகத்திடம் இருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார் மோனிகா. அவரை காப்பாற்றி “எப்படியும் சாகத்தான் போகிறாய், அதற்கு என்னுடனே இருந்து என் கடையில் வேலை பார். உனக்கு எப்போது என் மீது நம்பிக்கை வருகிறதோ அப்போது என்னை திருமணம் செய்துகொள் என்று” அழைத்துச்செல்கிறார் நாயகன்.

gle51u0g

வெங்கடேன் காலணா சம்பளம் என்றாலும் அது தான் முதலாலியாக இருந்து சம்பாதித்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சுயமரியாதை உள்ள இளைஞன். தன்னோடு பழகிய நண்பர்கள் பலர் வெளி ஊர்களுக்கு சென்று பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்தாலும் தான் முதலாளியாக இருப்பதாக பெருமிதத்தோடு கூறிக்கொள்பவர்.

வெங்கடேசன் – மோனிகாவின் வாழ்க்கை எந்த வித பிரச்னையும் இல்லாமல் நகர்கிறது. இவர்களுடைக்கிடையே காதலும் வளர்கிறது. இந்நிலையில் திடீரென அரசு பேருந்தால் ஏற்படும் விபத்தில் வெங்கடேசன் தனது இரு கைகளை இழந்து விடுகிறார். அதன் பிறகு அவர்களது வாழ்கை தலைகீழாக மாறுகிறது. விபத்தில் கைகளை இழந்த வெங்கடேசன் நஷ்ட ஈடு கேட்டு வழக்காடு மன்றத்திற்கு செல்கிறார். அங்கு அரசாங்கம் வெங்கடேசனுக்கு 20 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்பு வழங்குகிறது. ஆனால் அதை அரசு கொடுக்க தாமதப்படுத்துகிறது. இதனால் அரசு போருந்து ஒன்றை நீதி மன்றம் வெங்கடேசனுக்கு ஜப்தி செய்து கொடுக்கிறது. அதன் பின் அரசு வெங்கடேசனுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததா, வெங்கடேசனுக்கு ஜப்தி செய்து கொடுக்கப்பட்ட அரசு போருந்து என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பொதுவாக அரசு நிர்வாக சீர்கேடுகளை அம்லப்படுத்தும் கதை அம்சங்கள் கொண்ட படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும். அதன் அடிப்படையில் இந்த படம் முக்கிய இடம் வகிக்கும். இதுவரை யாரும் கையில் எடுத்து பேசப்படாத, பேச வேண்டிய முக்கிய பிரச்னையை இப்படம் பேசியிருக்கிறது.

kdhkpme8

அரசு போக்குவரத்து போருந்துகளால் நடந்த விபத்துகளின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்காக தறவுகளைம் ஆதாரங்களையும் திரட்டி இருக்கிறார் இயக்குநர். அதே போன்று அரசு போக்குவரத்து விபத்துகளில் சிக்கி இன்றுவரை மீண்டு வர முடியாத எளிய மக்களின் வாழ்வியலை பதிவு செய்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

எளிய மக்களின் வாழ்வியலை வெகு சில படங்களே நெருக்கமாக பதிவு செய்யக்கூடியதாக இருக்கும். அந்த பட்டியலில் இந்த படமும் இடம் பிடிக்கும். வெங்கடேசனாக நடித்திருக்கும் ஹரி நடிகராக இல்லாமல் நமது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரைப்போலவே இருப்பது எளிமையாக அவரோடு இணைந்துக்கொள்ள முடிகிறது நம்மால். புது முகம் என்பதை எந்த இடத்திலும் நம்மால் அறிந்துக்கொள்ள முடியவில்லை.

கதாநாயகியாக நடித்திருக்கும் மோனிகா படம் முழுவதும் கவனம் பெறுகிறார். காதல், வலி, பிரிவு என அனைத்தையும் நம்முள் கடத்துகிறார். தனக்கு கொடுக்கப்பட்டிருப்பது வலுவான கதாபாத்திரம் என்பதை அறிந்தது தன்னுடைய நிதானமான நடிப்பில் நீங்கா இடம் பிடிக்கிறார். அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

mmcors5

மக்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் சட்டம் சாமான்ய மக்களுக்காக பயன்படுகிறதா? அரசு செய்யும் தவறுகளை அம்பலப்படுத்தினாலோ, அல்லது கேள்வி கேட்டாலோ அரசுக்கு எதிரானவன் என முத்திரை குத்தும் அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதை ஆழமாக பதிவு செய்திருக்கிறது இப்படம்.

அரசு போக்குவரத்து நிர்வாகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி என்ன, அதன் செலவுகள் என்ன என்பதைப்பற்றியெல்லாம் தெளிவாக தெரிந்துக்கொள்ள முடிந்தது. போகிற போக்கில் சில தகவல்களை சொல்லாமல் தேவையான இடங்களில் தேவையான தகவல்களை வசனங்களால் அள்ளி இறைத்திருக்கிறார் இயக்குனர்.

கதை, வசனம், பாடல் என எல்லா வேலையையும் தானே சுமந்திருக்கும் இயக்குநரின் வரிகளில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் இதயத்தை வறுடுகிறது. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படதிற்கு வலுசேர்க்கிறது. எதார்த்த வலியை எளிமையாக கடத்தும் படமாக தோழர் வெங்கடேசன் அமைந்திருக்கிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்