முகப்புவிமர்சனம்

“உணர்வுகளை சோதிக்கும் படம்” உணர்வு விமர்சனம்!

  | Friday, July 19, 2019

Rating:

“உணர்வுகளை சோதிக்கும் படம்” உணர்வு விமர்சனம்!
 • பிரிவுவகை:
  சோஷியல் டிராமா
 • நடிகர்கள்:
  அருள் டி ஷங்கர், அன்கிதா
 • இயக்குனர்:
  சுப்பு
 • பாடல்கள்:
  நகுல் அபியன்கர்

சுப்பு இயக்கத்தில் புதுமுகங்கள் அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உணர்வு’. எளிமையான மனிதர்களின் உணர்வுகளை முதலீடாக்கி சமூகத்தில் வளர நினைக்கும் மனிதர்கள் சிலரின் சூழ்ச்சமம்தான் இப்படத்தின் கதைகரு. இந்த சூழ்ச்சமத்திற்கு பலியாகும் ஒரு எளிய ஏழையின் கதை படத்தை தாங்கி பிடிக்கிறது.

வேலை தேடி அலையும் இளைஞனாக கதாநாயகன் வருகிறார். பத்திரிகையாளராக நாயகி அறிமுக்மாகிறார். நாயன் வேலை தேடி அலைந்து வெறுப்பாகி சீக்கிறமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டுகிறான். அதற்கு கதாநாயகன் பயன்படுத்தும் ஆயுதம் உணர்வு.

கதாநாயகியும், நாயகனும் ஒரு சமூக செயற்பாட்டாளரை தேர்வு செய்கிறார்கள் தங்களது திட்டத்திற்கு. பின் மூவரும் சேர்ந்து பிச்சை காரர்களை அழைத்து வந்து வேலை கொடுத்து அவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். அந்த சமூக செயற்பாட்டாளருக்கு தடையாக எம்.எல்.ஏ ஒருவர் இருக்கிறார். படத்தின் நாயகர்களுக்கு உதவும் நாட்டின் முதல்வர் இருக்கிறார். அவருக்கு எதிராகவும் எம்.எல்.ஏ. இருக்கிறார். எம். எல். ஏ என்னவானார். இவர்களின் திட்டம் பளித்ததா இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை.

d5ut5kr8

மனிதர்களின் உணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல் என்கிற புதிய யுக்தியை கையாண்டு இருக்கிறார் இயக்குநர் அதற்கு பாராட்டுகள். ஆனால் திரைக்கதையாக பார்க்கும் போது பெரிய தோல்வியை அவர் சந்தித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே பார்த்து பழகி, படித்த வசனங்கள் படத்தில் ஆங்காங்கே தூவி விடப்பட்டிருப்பது எறிச்சலூட்டுகிறது. படத்தின் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் ஏகப்பட்ட முரண்கள் இருப்பதால் கதைக்குள் இணைந்துக்கொள்ள முடியவில்லை. எவ்வித தொடர்பும் இல்லாமல் பாடல்கள் ஒலிக்கிறது.

முக்கிய கதாபாத்திரங்களை தவிற மற்ற கலைஞர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகனுக்கும், நாயகிக்கும் இன்னும் பயிற்சி தேவை படுகிறது. நடிக்க முயற்சித்து தோற்று போகிறார்கள். தேவையில்லாத காமெடி காட்சிகள் கடுப்பேற்றுகிறது. பழைய வசனங்கள் சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்தது போல் இருந்தது. சொல்ல வரும் செய்தியை எளிமையாக சொல்லாமல். காதை சுற்றி மூக்கை தொடுவது போல் நீளுகிறது படம். சொல்ல வரும் நல்ல செய்தியில் ஸ்வாரஸ்யம் இல்லை. பின்னணி குரல் ஒரு சிலரைத் தவிற யாருக்கும் சரியாக இணையவில்லை. சென்னையின் புறநகர் பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இயல்பை தாண்டி மிகைப்படுத்தப்பட்டது போல் இருந்தது சில காட்சிகள். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது. கதையின் தொடக்கத்தில் சொல்லப்படும் செய்திக்கும் கதைகளத்திற்கு என்ன தொடர்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மொத்தத்தில் படம் பார்க்க பொறுமை வேண்டும். மொத்தத்தில் ஒரு சில இடங்களை தாண்டி படத்தில் உணர்வு ரீதியாக எங்கேயும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்