முகப்புடிவி

வனிதா ஆர்மி ரெடியா இருங்க..! இனி தினமும் அக்காவோட வெறித்தனமான ஆட்டத்த டிவி-ல பாக்கலாம்...

  | October 23, 2019 17:22 IST
Bigg Boss

துனுக்குகள்

  • வனிதா, 1995-ல் விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தில் அறிமுகமானார்.
  • பிக்பாஸ்-3 நிகழ்ச்சியின் மூலம் வணிதா பிரபலமானார்.
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்கவுள்ளார் வணிதா.
பிரபல டி.வி. சீரியலில் BB-3 வனிதா வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்-3 நிகழ்ச்சியில் ‘வத்திக்குச்சி' என்ற அடைமொழி பட்டத்தோடு உலகளவில் தமிழ் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றவர் நடிகை வனிதா. பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் மகளான இவர், சந்திரலேகா திரைப்படத்தில் விஜயிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்தார். ஆனால், திரைப்படங்கள் ஏதும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3-வது சீசனில் கண்டெஸ்டண்டாக பங்குபெற்றார்.

வனிதா இல்லை என்றால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியே விறுவிறுப்பாக இருந்திருக்காது என்று சொல்லும் அளவிற்கு அவரின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. அவரின் இடைவிடாத துணிச்சல் பேச்சும், வெறித்தனமான விளையாட்டும், சண்டையில் எதிராலிகளை கையாளும் திறனும், கண்டெஸ்டண்டுகளிடையே சின்ன சின்ன சண்டை மூட்டுதலும், தனது குழந்தைகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பும் அவரை தமிழ் ரசிகர்களிடையே ஈர்க்க வைத்தது. பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வாய்ப்பில்லை என்றாலும் வனிதாவுக்கென தனி ஆர்மியே அமைத்து கொண்டாடினர் ரசிகர்கள். BB-3 தொடங்கி கடைசி நாள் வரை இவரை பற்றி பேசாமலும், இவரை வைத்து மீம்ஸ் போடாமலும் இருந்த நாளே இல்லை.
இந்நிலையில், ‘வனிதாக்கா'வை மிஸ் பன்றோம் என்று எண்ணும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, அவர் சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் வில்லியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடித்தால், பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த சீரியலையும் சூடுபிடிக்கச் செய்வாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்