முகப்புடிவி

'மீண்டும் ஒளிபரப்பாகும் சக்திமான்' - மகிழ்ச்சியில் 90's கிட்ஸ்

  | March 31, 2020 17:41 IST
Shakthimaan

துனுக்குகள்

 • 1000 சூப்பர் ஹீரோக்கள் வந்து சென்றாலும் இந்திய 90's கிட்ஸ்சுக்கு
 • சூப்பர் ஹீரோவான சக்திமான் தொலைக்காட்சி தொடர்
 • மனதை கவர்ந்த நடிகர் முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கம்
கொரோனா பயத்தில் மக்கள் செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கி உள்ள நிலையில், இந்திய அரசு பல பழைய மற்றும் மக்கள் மனதிலிருந்து நீங்க இடம்பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் ஒளிபரப்பி வருகின்றது. ராமாயணம் போன்ற இதிகாச தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பு அண்மையில் வந்தது. அதிக அளவில் வீட்டில் நேரத்தைச் செலவிடும் மக்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. 

இந்நிலையில் 1000 சூப்பர் ஹீரோக்கள் வந்து சென்றாலும் இந்திய 90's கிட்ஸ்சுக்கு மிகவும் பிடித்தமான சூப்பர் ஹீரோவான சக்திமான் தொலைக்காட்சி தொடர் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தகவலை பலர் தெரிவித்தாலும் அந்த தொடரில் சக்திமானாக நடித்து குழந்தைகள் மனதை கவர்ந்த நடிகர் முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். 

அன்றாட பிழைப்பை நம்பி காலத்தை நகர்த்தும் மக்களுக்கு இந்த கொரோனா ஒரு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தாலும், பலருக்கு இது போன்ற பழைய நிகழ்ச்சிகளின் தொகுப்பு மன நிம்மதியை தந்து வருவது நிதர்சனமான உண்மை.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com