முகப்புடிவி

“அல்டிமேட் சூப்பர் ஸ்டாரின் அதிரடி சாகசம்” Promo-வுடன் ரஜினிகாந்தின் ‘Into the Wild’ ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..!

  | February 27, 2020 11:18 IST

துனுக்குகள்

  • இந்நிகழச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியில் பங்குபெரும் முதல் இந்திய நடிகர் ரஜினிகாந்த்.
  • ரஜிநிகாந்துக்கு இதுவே முதல் தோலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.

டிஸ்கவரி தொலைக்காட்சிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘Into The Wild with Bear Grylls' நிகழ்ச்சியின் ஒளிபரப்புத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் முதல் முதலாக தொலைக்காட்சிக்காக நடித்துள்ள நிகழ்ச்சி தான் ‘Into The Wild with Bear Grylls'. Discovery தொலைக்காட்ச்சியில் Bear Grylls எனும் பிரிட்டிஷ் ராணுவ வீரர் தொகுத்து வழங்கி, மிகவும் பிரபலான நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சியில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் கர்நாடகா மாநிலம் பண்டிபுரா வனப்பகுதியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், ரஜினிகாந்தும், கிரில்ஸும் ஒரு மரண மாஸான ஜீப் முன்னர் நின்று போஸ் கொடுக்க, ஆக்ரோஷ இசையுடன் நெருப்புக் கொப்பளிக்க இன்ட்ரோ கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், பட்டையைக் கிளப்பும் ப்ரோமோவை டிஸ்கவரி சேனல் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சூப்பர் ஸ்டார் 4 சக்கரம் கொண்ட all-terrain vehicle-ஐ ஓட்டிவரும் அந்த காட்சியை பிளர் செய்து வெளியிட்டு, ரசிகர்களின் ஆவலைத் தூண்டச் செய்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிக்கு இதுவே முதல் தொலைக்காட்சி அறிமுகமாகும். மேலும், அவரே இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் முதல் இந்திய நடிகரும் ஆவார்.

கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் ‘wild life with PM Narendra Modi' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. அது உலகம் முழுக்க மிகவும் பிரபலமானது. அதற்கும் முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகர்களான மைக்கேல் பி. ஜார்டன், ஸாக் எஃப்ரான், பென் ஸ்டெல்லர் உள்ளிட்ட பலர் இது போன்ற வைல்டு லைஃப் நிகழ்ச்சியில் பேர் கிரில்ஸுடன் பங்குபெற்றுள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்
Listen to the latest songs, only on JioSaavn.com