முகப்புடோலிவுட்

பிரபாஸ் நடிப்பில் 'அதிபுருஷ்' - இலங்கேஸ்வரனாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நாயகன்..!

  | September 03, 2020 11:49 IST
Adipurush Film

துனுக்குகள்

 • ராதேஷியாம் என்ற அந்த படத்தின் first லுக் போஸ்டர் மிகப்பெரிய
 • இந்த ஆர்வம் அடங்குவதற்குள் "பிரபாஸ் 22" படத்தின் சிறப்பான அதிகாரப்பூர்வ
 • இலங்கேஸ்வரர் காப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிரபல நடிகர்
டோலிவுட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நடிகராக இருந்தாலும், எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் ‘பாகுபலி' எனும் ஒரு படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்று, உலகளவில் பிரபலமான நடிகர் தான் பிரபாஸ். பிரபாஸ் கடைசியாக அதிரடி திரில்லர் ‘சாஹோ' எனும் பான் இந்தியா திரைப்படத்தில் நடித்தார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் இப்படம் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்காலிகமாக ‘பிரபாஸ் 20' என்ற தலைப்பிடப்பட்டுள்ள அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் கடந்த ஜூலை 10-ஆம் காலை தேதி 10 மணிக்கு வெளியிடப்படும் என்று முன்பே நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். ராதேஷியாம் என்ற அந்த படத்தின் first லுக் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் மகாநட்டி பட இயக்குநருடன் தனது அடுத்த படம் படம் குறித்த அப்டேட் ஒன்றை அசத்தலாக கொடுத்தார் பிரபாஸ். இந்நிலையில் இந்த ஆர்வம் அடங்குவதற்குள் "பிரபாஸ் 22" படத்தின் சிறப்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று அண்மையில் வெளியானது. ஓம் இயக்கத்தில் உருவாக உள்ள "அதிபுருஷ்" என்ற இதிகாச திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க மிரட்டலாக இலங்கேஸ்வரர் காப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிரபல நடிகர் சைப் அலி கான். தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2021ம் ஆண்டு தொடங்கும் என்றும் 2022ம் ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com