முகப்புடோலிவுட்

லூசிஃபர் தெலுங்கு ரீமேக் : சிரஞ்சீவிக்கு தங்கையாகும் முன்னாள் கதாநாயகி..!

  | June 26, 2020 17:44 IST
Suhasini Mani Ratnam

இடையில் இப்படம் அஜித் கதாநாயகனாக நடிக்க தமிழில் ரீமேக் செய்யப்படும் என்றும் வதந்தி பரவியது.

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமாக, மோலிவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மாஸ் ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘லூசிஃபர்'. இப்படம் ரூ. 170 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸடர் ஹிட்டானது. இப்படத்தில் மஞ்சு வாரையர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் தற்போது டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளாராம். மேலும், இப்படத்துக்கான திரைக்கதையை ‘சாஹோ' புகழ் சுஜீத் கையாள்கிறார்.

cpkp9748

தற்போதைய சலசலப்பு என்னவென்றால், இப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்த முக்கியமான கதாப்பாத்திரத்தில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை விஜயசாந்தி ஆரம்பத்தில் இந்த பாத்திரத்திற்காக கருதப்பட்டதாகவும், பின்னர் அது சுஹாசினிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

80 களில் திரையில் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் சுஹாசினி மணிரத்னம் மற்றும் சிரஞ்சீவி ஜோடியும் ஒன்று. இப்போது, மலையாள பிளாக்பஸ்டர் லூசிபரின் தெலுங்கு ரீமேக்கிற்கு இருவரும் மீண்டும் கைகோர்க்கலாம். ஆனால், இந்தமுறை உடன்பிறப்புகளாக நடிக்கவுள்ளனர்.

‘லூசிபர்' மலையாளத்தில் வெளியானபோது, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால், இடையில் இப்படம் அஜித் கதாநாயகனாக நடிக்க தமிழில் ரீமேக் செய்யப்படும் என்றும் வதந்தி பரவியது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com