முகப்புடோலிவுட்

"இது ஆதாரமற்றது" - வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த 'ஆச்சார்யா' படக்குழு..!

  | August 27, 2020 17:00 IST
Acharya Film Poster

துனுக்குகள்

 • 1978ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான "Pranam Khareedu" என்ற படத்தின்
 • ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ், என்று பன்முக திறைமைகொண்ட இவர் பிரபல
 • "ஆச்சார்யா" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் அந்த கதை
1978ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான "Pranam Khareedu" என்ற படத்தின் மூலம் இந்த திரையுலகிற்கு அறிமுகமானார் ஒரு நடிகர். கடந்த 42 ஆண்டுகளில் இவர் மூன்று தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்றபோது தமிழில் இவருக்கு இளசு முதல் முதியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இயக்குநர் இமயம் தான் இவரை தமிழில் 47 நாட்கள் என்ற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் அவர்களின் ராணுவ வீரன் மற்றும் மாப்பிள்ளை ஆகிய படங்களில் இவர் தோன்றினார். 42 ஆண்டுகளாகியும் இன்றளவும் தெலுங்கு திரையுலகில் இவர் தான் மெகா ஸ்டார். 

ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ், என்று பன்முக திறைமைகொண்ட இவர் பிரபல நடிகர் ராம் சரண் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான "Sye Raa Narasimha Reddy" திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது இவர் இன்றளவும் இளம் நடிகர்களுக்கு சிம்மசொப்பனம் என்பதை நிரூபித்தது. மகன் ராம் சரண் சிறந்த நடிகராக விளங்கிவரும் நேரத்தில் அவருக்கு சற்றும் சலிக்காமல் இன்றும் போட்டியாக விளங்குகிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவி அவர்கள் பிறந்தநாள் அன்று அவருடைய அடுத்த படமான "ஆச்சார்யா" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் அந்த கதை குறித்து சில வந்தந்திகள் தற்போது ஏலவே அதை முற்றிலும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த கதை முற்றிலும் koratala சிவா அவர்களால் உருவாக்கப்பட்டதே அன்று வேறு யாரும் உரிமைக்கூற முடியாது என்று விளக்கம் தெரிவித்துள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com